Tuesday, January 23, 2024

ஏணி by Veena Shankar



ஏற்றி விட ஏணி இருந்தாலும்

ஏறும் முயற்சி ஏறுபவரிடம் பிறக்க

 வேண்டும் 


ஏற்றியவரை தூற்றும் குணம் கொள்ளது அவரை

போற்றிட வேண்டும்


 நீல வானில் வெண் மேகத்தின் ஊடே யார் ஏணி இட்டது?


ஓசோனை துளையிட்டது காணாது வானின் நீலத்தை சூறையாட திட்டமா?


கருமேகங்கள் உருவாக விடாமல் மலையை குடைந்து வலம் வர ஆவலா?


இதில் புவி வளம் காணவும் விருப்பமா?


அறியாமையில் செய்கின்ற யாவும் பொய்மையாகி போகும்


ஏணி உண்டு என்கிற பலத்தில் ஏறி விடாதே!

நீ செய்யும் செயலால் ஏணியும் உதிர்த்து கொள்ளும் தனை தானே


 ஏறியவனிமிருந்து ஏமாற்றமடைந்த ஏணி


 கீழிருந்து பார்த்தால் அது ஏணி

மேலிருந்து பார்த்தால் அதுவே சரிவு


 பூமிக்கும் வானுக்கும் ஏணி தேவையில்லை நற்பலன் கொண்டாலே போதும்


 ஏறி விடும் வயதல்ல எனக்கு உடலால்


ஏற்றி விடும் பலமே எனக்கு செயலால்


பறித்து விடும் எண்ணம் இல்லை எனக்கு மனதால்


பக்குவம் கொள்ளும் எண்ணமே எனக்கு காலத்தால்


விலக்கி விடும் நிலை அல்ல எனக்கு குணத்தால்


விலகி நிற்கும் நிழலே எனக்கு எண்ணத்தால்


வளர்ந்து வரும் பருவம் அல்ல எனக்கு முயற்சியால்


தளர்ந்து போகும் நடையே எனக்கு வயோதிகத்தால்


ஏணியின் மனமே அழகு , தான் ஏறாத இடத்திலும்


 ஏணி ஏறுவதற்கு மட்டுமல்ல இறங்குவதற்கும் தான்


ஏறிக் கொண்டே சென்றாலும் அதே ஏணியின் பலத்தில் வெகு நேரம் நிற்க முடியாமல், 

வேறு வழியில்லாமல் இறங்கி வரத் தான் வேண்டும். 


ஏறும் பாதையின் ஏணி இறங்கு முகமாக மாறவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...