Friday, January 12, 2024

இந்த வார படமும் கருத்தும் by Veena Shankar



 இது சிவன் தலை மேல் விழும் தண்ணீர் போல எப்போதும் விழுந்து கொண்டே இருக்கும். 😃 

வாழ்க்கையில் துவாரங்கள் மிகுதி. அதை அடைக்க பார்ப்பதும் ஒழுக விடுவதும் நம் கையில்


அற்ப பேச்சினால் மிஞ்சுவது கடினமான சுமைகளே! அது துவராமுள்ள பாத்திரத்தில் தங்கும் கடின நீர் போன்றது


நினைவுகள் பல இருந்தாலும் இதயத்தை தைத்த அம்புகளே நிரந்தரம்.

அதனின்று ஆறிய வடுக்கள் வடிந்துவிடும், வடியாதது தைத்த அம்பினால் ஏற்பட்ட ரணம்


நல்லவைகளை தேக்கி, தீய எண்ணங்களை

 விடுக்கும் அல்ல அல்ல வடிக்கும்

 பாத்திரமாக இருக்க வேண்டும்

 என்றும் நம் கதாபாத்திரம்


மேலே தாங்கும் கம்பியின் திறன் அந்த பாத்திரத்தின் துவாரத்தை பொறுத்தே அமையும்


ஓர் வாளியில் இத்தனை ஓட்டைகளா? எப்படி இதில் தண்ணீர் முகர்ந்து, தாகம் தீர்ப்பது என்ற கேள்வி நம்மிடம் எழாமல் இல்லை. 


சரி. ஓட்டையை அடைக்கலாம் என்றால் எந்த உலோகத்தால் வாளி செய்யப்பட்டுள்ளதோ அந்த உலோகத்தை கொண்டு தான் அடைக்க வேண்டும். இது அவசர கதிக்கு உசிதமானதல்ல. மேலும் அதனை அடைத்தாலும் மீண்டும் ஒழுகல் ஏற்படாமல் இருக்கிறதா? என்பதே அடுத்த கேள்வி. 


 இப்படி தான் நாம் வாழும் வாழ்க்கையும் இருக்கிறது. மனிதர்களிடையே நிலவும் போட்டி, பொறாமை, கோபம், ஒழுக்கக்கேடு இன்னபிறவும் ஏன் என்ற கேள்வி உண்டே தவிர, அதனின்று வெளிப்பட்டு நிற்க யாரும் அறிந்திலர். 


 அறிந்தவர் பலர் சொல்லும் பேச்சுக்களை கேட்டு பழகியிருந்தாலும் அதை பின்பற்றுவது சிலரே அதுவும் சில நாட்களே.


முடிந்தவரை வாளியின் கீழ் ஓட்டையை அடைக்க முற்பட்டால் நீரின் இழப்பை சிறிது கட்டுப்படுத்தலாம். மாறாக மேல் ஓட்டையை அடைக்கிறேன் பேர்வழி என்று அதனை அடைக்கும் பட்சத்தில் நீரிழப்பை தடுக்க முடியாது என்பதை நாம் அறிந்திருந்தாலும் நம் வாழ்வில் சரியானதை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உண்டு என்று சொல்லியே சீர்கேடான வாழ்க்கைக்கு தயாராகி விடுகிறோம் என்பது மட்டுமே உண்மை.


பெரும்பாலும் நம் மனதில் மேலோட்டமாக பதிந்துள்ள புறம் பேசுவது, பிறரை அவமானப்படுத்துவது , கோபம் , பொறாமை போன்ற குணத்தை கைவிட்டாலே மற்ற அனைத்தும் தானாக சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.


வாளியின் ஓட்டை போல் அல்லாமல் நிறை குடமாக வாழ்ந்து காட்டுவோம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...