Thursday, February 29, 2024

வெண்புறா by Vidhya Nivash


 குளிரில் நடுங்கி ,மழையில் குளித்து, வெயிலில் காயும் தேகம் எங்களுடையது.போர்வை வேண்டாம், குடையும் வேண்டாம்.அந்தி சாய்ந்த பொழுதில் இளைப்பாற சிறு மரக்கிளை போதும்.அதை தவிர எந்த சுமைகளும் எங்களுக்கில்லை.

உல்லாசமாக காற்றை குடித்து மேலே பறக்கும் நேரம்,மழை சாரலில் நனைந்த உள்ளம் , மெல்ல குளிர்வாட்ட இதமான சூட்டை தேடுது தேகம்.

கவிதைக்கு கவிதை by Veena Shankar

 


கவிதைக்கு கவிதை


கவிகளுக்கு உரிமையானாய்


படிப்பவர்களுக்கு கனியானாய்


எதுகையும் மோனையுமாய் 


விளங்காத விசயங்களுக்கு விவரமானாய் 


காதலர்களுக்கு தூது போனாய்


மன வேதனைக்கு ஓர் மருந்தானாய்


பிரிந்தவருக்கு ஏக்கத்தில் துணையானாய் 


போட்டிக்கும் பங்களிப்பு நீ ஆனாய்


திடீரென்று உதயமாவாய்


தனி படத்திற்கும் விவரமானாய்


கவிஞரின் எழுத்தால் சில நேரம் பொய்யானாய்


மெய்க்கு இங்கே புறம்பானாய்


செவிக்கு விருந்தானாய்


புதுமையை ஏற்றாய்


வரும் காலம் பொற்காலம் தான் புதுமையை கொள்வதால்

Wednesday, February 28, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


ஒரு பிடி மண்ணைக்கூட எடுத்துச்செல்ல முடியாது.ஏன் பூமி சுமக்கும் இந்த பூத உடலையும் எடுத்த செல்ல முடியாது.ஆனால் நாம் ஆடும் ஆட்டம்.இதை உணர்ந்தால் எதுவும் நம் சொந்தமில்லை என்ற உணர்வு மேலொங்கும், எங்கும் பஞ்சம்,பட்டினி,வீடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

பொன் ஆசைவிட மண் ஆசை பொல்லாதது.

கருவில் உண்டான நாம் மண்ணுக்கே சொந்தம் .அந்த  மண்ணை சிறிதாவது வளப்படுத்தி சொல்வோம். ஒரு மரக்கன்றை நட்டு.

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஆசை என்பது நம் கையளவு தான் இருக்க வேண்டும். அதை  அடைந்த பின்பு , நம் கை தானாக  தளர்ந்து போய் விடும் என்பதை  நாம்  அறிவோமானால் கையில் அடைவதும் சிறுத்து போகும். 


இயற்கையான வாயுவும் நீரும் கையில் அடைபடாத போது , அதை தாங்கி நிற்கும் உடலுக்குள் இருக்கும் மனதிற்கு தான் எவ்வளவு ஆசை?


 பிடி தளர்ந்து கை விட்டு  போவது விரல்களால் மட்டுமல்ல , கையில் அடைத்து வைத்திருக்கும் பொருளின் தன்மையாலும்


 நிலவிற்கு பயணம் என்றதும் உவகை கொண்டேன் மனதில்

நம் கொடி நாட்டிய இடத்தில் கால் பதிக்க

அங்கே பல வண்ண கொடிகள் நிரம்பி வழிந்தன

கட்சி கொடிகளாலும்

ஜாதி கொடிகளாலும்

வீட்டு மனைப்பிரிவு  தரகர்களாலும்

Tuesday, February 27, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


தன்னைவிட உயரமாக வளர்ந்த பிள்ளை மேல் கைப்போட்டு நிற்கும் அப்பா.

படைப்பாளியின் பூரிப்பு .

சாதனை படைக்கிறோம் என்று இயற்கைக்கு புறம்பாக வரும் எதுவும் ஆரோக்கியமானதா? இல்லை பெருமைக்கா?அழகுக்கா?

அவை அருங்காட்சியக பொருளா? இல்லை அறுசுவைக்கு உகந்ததா?

படமும் கருத்தும் by Veena Shankar

  


அறிவியலின் வளர்ச்சி, மனிதனை விட பிரம்மாண்டமாய்

என்ன காய் இது ? என்ற குழப்பத்தில் நானிருக்க,

ஒரு மாதத்திற்கு காய்கறி கடைக்கு போவதிலிருந்து விடுதலை என்று

நினைத்தார் என் கணவர்

 மனித மூளை அளவில் சிறிதாயினும்

படைத்த பொருள் என்றுமே சிறந்தது

 பசுமை மாறா காயின்

பழமை மாறா சுவை


மூளையை சலவை செய்ததால்

மூலையில் ஒதுங்காத காய்

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


நீயா? நானா?


நம் இருவரில் மஞ்சளில் ஜொலிப்பது யார்- நீயா? நானா?


நம் இருவரில் அம்மா அப்பா செல்லம் யார் - நீயா? நானா?


நம் இருவரில் ஒழுங்காக சாப்பிடுவது யார்- நீயா? நானா?


நம் இருவரில் பள்ளிக்கு அடம் பிடிக்காமல் செல்வது யார்- நீயா? நானா?


நம் இருவரில் மழையை மயக்கி நிற்க வைத்தது யார் - நீயா? நானா?


நம் இருவரில் மழையில் நனையாமல் சளி பிடிக்காம பார்த்துக் கொள்வது யார்- நீயா? நானா?

சொல்லு …நீயே சொல் பப்லு…!


அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை வைத்தாள் - அம்மாவிடம் திட்டு வாங்கிய கடுப்பில் - மஞ்சள் பூட்ஸ் மீனுக் குட்டி💛💛

படமும் கருத்தும் by Veena Shankar



உனை கண்டதும் அழகில் நான் மயங்கினேன் 

நீ வளரும் வரை காத்திருக்க

என்னால் முடியாது

வா! உனை அப்படியே

சாப்பிடுகிறேன் என்றதோ அழகு குட்டி?


ஒரே நிலையில் உள்ளதால் வந்த துள்ளலா?


ஒரே நிறம் என்பதால் வந்த ஆச்சரியமா?


ஒரே புன்னகை கொண்டதால் ஆனந்தமா?


ஒரே பார்வை அமைந்ததால் பிரமிப்பா?


ஆர்வம் காட்டுவதால் அடைக்களமா?


அழகை கண்டு மயக்கமா?


யார் அழகு இருவரில்?


பித்து கொள்கிறது மனம்


மூர்ச்சை கொள்ள செய்கிறது படம்


தெளிவு பிறக்கிறது தினம்


அறிவு வளர அதுவே தனம்


செயற்கை ஆடை குழந்தையின் குளிருக்கு இதமாய் 


இயற்கை இறக்கை பறவைக் குஞ்சுக்கு பதமாய்


இருந்தாலும் காட்சி நமக்கு 


தரமாய்


 வரமாய்


நிறமாய் 


சுகமாய்


அமைவதும் அரிதாய்

படமும் கருத்தும் by Ramalakshmi

 


நீயும் என்னைப் போல அம்மாவுக்குத் தெரியாமல் மழையில் விளையாட வந்தாயோ? நானாவது Raincoat போட்டுருக்கேன். நீ அதுவும் கூட போடலியே. உனக்கும் மழை -னா அவ்வளவு இஷ்டமா?


படமும் கருத்தும் by Vidhya Nivash



 வாவ் ஒரே மாதிரி ரைன்கோட்..சேம் பின்ச்🙌🏻

முடிக்கூட மழையில சிலிர்க்குது. 

வா இரண்டு பேரும் மழையில விளையாடலாம்.

ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் ஆச்சரியமாக ரசிக்க, அங்கே வானமும் ரசிக்குது மழையை தூவி.

Friday, February 23, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash



வாவ் எவ்வளவு பெரிய கரும்பு.எப்படி உடைத்து,பிடித்து சாப்பிடுவது. சீக்கரம் வளரனும் 🤔அதுக்கு நிறைய சாப்பிடனும்..

 Complan,boost குடிக்கனும்😁

நானும் டீக்குடிக்க கூப்பிட்ட ஒருவரைக் கூட காணோம்.பரவால்ல தனிமையில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இயற்கையோடும்,நினைவோடும் அசைபோடுவதும் சுகம் தான்..


படமும் கருத்தும் by Veena Shankar

  


கூட்டத்தை விட்டு தப்பி வந்த யானை,

 தன்னை அடையாளம் காட்டாமல் ஒளிந்து

 கொண்டு ஊஞ்சலாடும் காட்சி

உங்கள் கண்களை மறைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் சுதந்திரத்தை இழந்து போல் குட்டி யானையை காட்டிக் கொடுத்து பகைவனாகி விடாதீர்கள் எனக்கு


 கண்டவுடன் பிரமிப்பு,

சத்தியமா இதுவும்

 எதுவும் முடியும் நம்மால் என்ற நம்பிக்கையில் மனம் சொன்னது

கால்கள் நடைபோட்டது வெற்றிக்காக

யானைபடையே போரில் பம் மிக்கது. 

நீ பிரம் காட்டி உட்கார்ந்து கொண்டியிருக்கிறாயே? உன்னை எப்படி படைக்கு தேர்ந்தெடுப்பார்கள்? என்ற கேள்விக்கு கூட செவி மடிக்காமல் உல்லாசமாய் ஊஞ்சலில் குட்டி யானை.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைகளை முணுமுணுத்தவாறே.குட்டி யானையின் இரு கால்களும் தும்பிக்கையும் காணோம் என்று சொல்ல தோன்றினாலும் அதன் முதுகுக்கு பின்னால் நாம் நின்று பார்க்கிறோம் என்பது நமக்கு தெரிவதில்லை.


அது போலத்தான் ஒருவரின் மனதை சரியாக தெரிந்து கொள்ளாமல் அவரை பற்றி அவதூறு பேசக்க கூடாது என்ற நியதி இதிலிருந்து புரிகிறது. 😉😃அடிக்கிற வெயிலில் ஊஞ்சலாட்டம் தேவையா?

வா! கரும்பு தோட்டம் பக்கத்துல தான் இருக்கு. கொஞ்சம் சாப்பிட்டு அப்பாவுக்கும் கொண்டு போலாம் 

என்று சொன்ன அம்மாவை புதிராக பார்த்தது குட்டி யானை. " என்ன கரும்பு தோட்டத்துல மட்டும் குளிராவா இருக்கும்?"என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் மௌனமாய் அமமாவின் வழியே சென்றது குட்டி யானை

படமும் கருத்தும் by Kiruthika

 


எல்லோரும் இப்படியே உட்கார்ந்த இடத்திலேயே ❤️ போடுங்க...

யாராவது வந்து ஊஞ்சல கொஞ்சம் ஆட்டி விடலாம் தானே ?!...😂

என் Mummy என்ன விட்டுட்டு..Yummy கரும்பு தேடி போயிட்டாங்க 😭

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


ஊ ல லல்லா… ஊஊ ல லல்லா!!!


ஊஞ்சலிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே!

ஆரண்யத்திலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே!


ஊஞ்சலிலே ஆட கொஞ்ச நேரம் தருவியா?

எங்க கெஞ்சல் உன் காதுக்கு கேக்கலியா?

படமும் கருத்தும் by Ramalakshmi

 


அம்மா: டேய் குட்டி! அவங்ககிட்ட போகாத! சொன்னா கேளு. என் கூட வாடா.


(Baby elephant not obeying her )


அம்மா: சொல்ல சொல்ல கேக்கலனா நான் போய்டுவேன்.


(She turns her back & moves)

Finally ,


அம்மா: இந்தா வர்றேன் பாரு


(She grabs him away)

Thursday, February 22, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


நிலா வெளிச்சமே கண்ணை கூசும் உறங்கவிடா..இந்த மின்விளக்கொளியில் எங்கே கண் உறங்க. இவர்கள் விளக்கை அணைக்கும் முன் சூரியனே வந்துவிடுது .நாமும் சேர்ந்து நைட் ட்யூட்டி பார்க்க வேண்டியதாக இருக்கு.பூங்காக்கூட பரவாயில்லை..இந்த குடியிருப்பு பகுதியில் இனிமேல் நான் ட்யூட்டிக்கு வரமாட்டேன்.

படமும் கருத்தும் by Kiruthika



 நீங்கள் இன்னும் ..

ஏனோ கூண்டுக்குள் ..?..

கூட்டுக்குள்..?..


உங்களின் -

பாதுகாப்பிற்கா ?..

இல்லை ..

உங்கள் -

உடமைகளின் 

பாதுகாப்பிற்கா ?..

எங்களுக்கு 

தெரியாது !..


இதோ 

எங்களை 

பாருங்கள்..!..

சுதந்திரமாய்..

சந்தோஷமாய்...

வானம்பாடி ..

பறவைகள் கூட்டம் ..

நாங்கள்...!!..


சேர்க்கவும் 

ஏதுமில்லை..

தொலைக்கவும் 

ஏதுமில்லை..!..

ஆதலால் 

தொல்லையும் 

ஏதுமில்லை..!..


உங்களை போல்

உதடு விரித்து 

புன்னகைக்க 

தெரியாது !..


ஆனால் 

எங்களை 

பார்த்ததும்..

உங்களை 

புன்னகைக்க 

வைக்க முடியுதே !!!..


இது 

போதும்..

எமக்கு !..

இது 

போதுமே ...

வேறென்ன 

வேண்டும்..

நீ போதுமே ..!!...


-இப்படிக்கு 

காதல் அன்னம்

படமும் கருத்தும் by Veena Shankar

 


பறவையும் ஆனது இங்கே களிறு தண்ணிரி்ன் பிம்பத்திலே


இரவின் இருட்டில் குளிரின் மடியில் ஓர்

இளமைக் கூட்டத்தின் ஆட்டம்


 அந்தப்புரத்தில் இளவரசியை புறந்தள்ளி நீராடிய

வெண்பறவைகள்

 நட்சத்திர விடுதியில் சற்றே தனிமை துறந்து இளைப்பாறும் நாங்கள் யாருக்கும் அடிமையுமல்ல

எவருடைய

அனுமதியின் தேவையுமில்லை


 தண்ணீரிலும் காதல் ராகம் பாடும் பறவைகள்


 வெண்மையிலிருந்து

செம்மேனிக்கு நிறம் மாறிய பறவைகள்

தத்தளிக்கிறதோ?

தவிக்கிறதோ?

காதல் மொழி பேச!


எத்தனை காலம் வரை

இந்த சாதி பிரச்சனை?

ஒழியட்டும் இன்றோடு என்று

தன் இனத்தின் நிறம் மறந்து 

சுதந்திரமாய் வட்டத்தை விட்டு

வெளியேறிய பறவைகளுக்கு புரிந்தது

மானுடனுக்கு எப்போது?


வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட

பறவைகள் அல்ல நாங்கள்

உங்கள் உள்ளம் கவர காட்சியானோம்


கருவி கொண்டு படம் பிடித்தாலும் 

கருமி அல்ல நாங்கள்

உங்கள் மனம் கிளரவே 

எங்கள் வனப்பு


இருளிலும் இழக்காது, மறக்காது உங்கள் விழியில் எங்கள் அழகின் திணிப்பு


யார் பெரியவன்? 

 என்ற பேச்சில்லை இங்கே

தண்ணீரில் மூழ்கியிருப்பதால்


யார் சிறியவன் ?

என்ற பேச்சில்லை இங்கே 

அகவை கணக்கிட தெரியாததால்


யார் தோற்றார்? 

என்ற பேச்சில்லை இங்கே  

காதலில் லயித்ததால்


யார் வென்றார் ?

 என்ற பேச்சில்லை இங்கே 

காதலுக்கு ஏதும் இணையில்லாததால்


யார் முன்னே ? 

என்ற பேச்சில்லை இங்கே

தண்ணீரில் மட்டுமே வாழ்வதால்


யார் பின்னே? 

என்ற பேச்சில்லை இங்கே 

அடிமை எண்ணம் மனதில் என்றும் இல்லாததால்


யார் அழகு? 

என்ற பேச்சில்லை இங்கே 

வனப்பு பகிரப்பட்டதால்


யார் வனப்பில்லை?

 என்ற பேச்சில்லை இங்கே 

காண்போரின் பார்வை சுகமானதால்


யார் அறிவாளி? 

என்ற பேச்சில்லை இங்கே 

யாரும் தன்னிலை மறக்காததால்


யார் மூடன்? 

என்ற பேச்சில்லை இங்கே 

தேவைகள் குறைவு என்பதால்

Wednesday, February 21, 2024

படமும் கருத்தும் by Kiruthika

 


 யாரங்கே..?!..

என் முதுகில்..

என்னை கேட்காமலே

அழகு புள்ளி வைத்து விட்டு போனது?!..


 என் விழியை -

நீங்கள் மட்டும் தான் 

ரசிக்கணுமா?!!..

நான் ரசிக்க 

கூடாதா ..?!..

ஒரு முக கண்ணாடி தான் 

பரிசாய் -

தந்து விட்டு போங்களேன் ..!..


இந்த புள்ளி மான் -

உங்களையே சுற்றி ..

துள்ளி குதித்து

வந்திடுவேன்..

நம்புங்கள்!..

படமும் கருத்தும் by Veena Shankar

 


என் விழியின் அழகை என் உடலில் பதித்தது யார்?

இயற்கையா?

அல்லது

என்னை கவின் கொள்ள வடித்தவனா?

இல்லை

வரைந்தவனா?


அழகுக்கு அழகு சேர்க்கும் வடிவத்திற்கு

கற்பனையும் வேண்டுமோ?

கண்டவுடன் காதல் கொள்ள பல மனங்கள் இருக்கும் போது 

சிந்தனையில் சுருக்கம் கொள்வதும் ஏன்? 

உருவம் பொருட்டல்ல அழகில் நாம் மயங்குவதே உண்மை

[19/02, 09:28] Veena Shankar: இவன் காண்போரின் விழிக்கு வினாவா?

இல்லை விடையா?


எப்படி இந்த கொள்ள அழகு என்பது வினா


கண்ட பின் ரசிப்பதே சாத்தியம் என்பதே விடை


விளையாட்டு பொருளா இது?


அலங்காரப் பொருளா இது?


கண்டதும் ஏந்தி கொள்ளவா இது?


கண் மறைத்தாலும் மனதில் நிற்கவா இது?


அழும் குழந்தைக்கு விளையாட்டு காட்டவா இது?


துள்ளி குதித்து ஆரவாரப்படுத்தவா இது?


இவற்றுள் ஏதுமில்லை அது


நித்தம் நான் பயன்படுத்தும் சாவி கொத்தின் அங்கம் அது.

படமும் கருத்தும் by Ramalakshmi



 ஏ சுட்டிப்பயிள்ளையே !

உன் உடலில் உள்ள புள்ளிகள் சொல்லும் கடவுள் உன் நெற்றியில் சரியாக ஒரு பொட்டு வைக்க எத்தனை முறை தோற்றுப் போனாரென்று...

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


சுட்டியே…மான் குட்டியே!

எங்கே போகிறாய்? 


சற்று பொறு!

அன்னையும், தந்தையும் 

உன் அண்ணனின் பஞ்சாயத்தில்..😌


அவன் பாக்கெட் மணியை 

சத்தமின்றி சுருட்டி,  

கேரட் அல்வா வாங்கி 

முழுங்கி விட்டாய்🤩 


உன் பாக்கெட் மணியை 

பத்திரமாக சேர்த்து வைத்து 

சமர்த்தாக சன் க்ளாஸ் 

வாங்கி மாட்டிக் கொண்டாய்😎


சற்று பொறு!

தீர்ப்பு வரும்- 

கண் குளிர சன் கிளாஸா? 

108 தோப்புக்கரணமா? 

என்று!! அது வரை சற்று பொறு!!


சுட்டி மானின் விழியே மீனாய்,


புள்ளிகளே நன்சத்திரங்களாய்,


துறு துறு வாலே பிறை நிலவாய்,


கால்களே மேகக் கீற்றாய்,


என் மனவானில் சிறகடிக்க,

விண்மீனாய் ரசிக்கின்றேன்- இந்த 

மான் குட்டியை❣️

Tuesday, February 20, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


செல்லக்குட்டி பட்டுக்குட்டி

 எத்தனை அழகு.பஞ்சு போல் மேனி,கூர்மையான கண்..

உள்ளத்தை கொள்ளை கொண்டவளே,சின்னஞ்சிறு பார்வையில் என்னை தொலைத்தேன்  ..

தொலைத்ததை தேட காட்டில் ஓட,மெள்ள ஓடும் உன் கால்களை தாங்க ஏங்கும் நிலமாகி போனேன் ..

நீ ஓட கூட ஓடும் மனம்..

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பார்த்தவுடன்  கண்களால் தூண்டப்பட்டு நாவால் தீண்டும் வரை பத்திரமாக பிறர் கை தீண்டா இடத்தில் இரு.

இனிப்பை பிள்ளைகளிடம்,உடன் பிறந்தவரிடம் சண்டை போட்டு சாப்பிடுவதே சுகம்.

இதில் வேறு பலவகை அனைத்தையும் பிட்டு சாப்பிட்டு பிடித்ததை கண்டுபிடிக்க ஒரு சோதனை.. நல்ல ரசனை.அதுவும் ஒரு சாதனையே.

அள்ளி கிள்ளி மெள்ள மெல்ல உள்ளே விழுங்க .என்ன ஓர் ஆனந்தம்.

அது முழுக்க தீரும் வரை.கள்வனின் காதலி போல் அப்ப அப்ப அந்த இடத்தையே எட்டி பார்க்கும் மனம்.

மகிழ்ச்சியை விட பதற்றத்தில் உனை கொள்ளும் போது மனம் கொள்ளும் அமைதி.

வலிகளின் நிவாரணி,பிரிவை மறக்க உன் கரம் பிடிப்பேன்.

Monday, February 19, 2024

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


பார்த்தாலே மலரும்- கண்களும், குடும்பமும்!

சேர்த்தாலே சுவைக்கும்- விருந்தும், உறவும்!

சுவைத்தாலே இனிக்கும்- நாவும், நாளும்!

தவிர்த்தாலே கனக்கும்- மனமும், மனிதமும்!

படமும் கருத்தும் by Veena Shankar

 


நான்கு திசைகளையும் ஓன்றிணைப்பது கடினம் என்றாலும் 

நான் மட்டும் விதி விலக்கு இங்கே

என் சுவையில் மக்கள் மயங்குவதால்


இனிப்பு பெட்டியின் கவர்ச்சி


பார்த்தவுடன் முகத்தில் மலர்ச்சி


மனதினுள் ஒருவித உணர்ச்சி


உண்டவுடன் சுவையில் சுழற்சி


மீண்டும் சுவைக்க தருமே

 உடலின் சர்க்கரை அளவில் அழற்சி


சுவைக்கமல் இருக்க எடுக்கிறேன் பயிற்சி


சிலநேரம் பெற்று விடுவேன் தேர்ச்சி


பலநேரம் சுவைக்காததால் தருமே தளர்ச்சி


கனவில் கூட கொள்வேன் சுவையில் வளர்ச்சி


இருக்கலாம் எல்லோருக்கும் சுவைத்த உடன் கிடைக்கும் மகிழ்ச்சி


ஆனந்தத்தில் என்றும் ஏற்கப்படும் தெளிர்ச்சி


சுவையும் சூழலும் குளிர்ச்சி

Sunday, February 18, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


தூக்கத்தில் கூட விழித்த நிலையின் அடையாளமாக கைகள் அடக்கிய விழிப்புக்கடிகை..

அசதியின் அடையாளமாக தானே மூடும் கண்இமைகள் உட்கார்ந்த நிலையில் தூக்கம் சொர்க்கத்தில் யாரோ பேச...

படுக்கை அள்ளி அணைக்க காத்திருக்க ஏன் நீள் சாய்விருக்கையில் தூக்கம்....

அது ஏனோ தொலைக்காட்சியை போட்ட உடன் வரும் தூக்கம்..

தாய் மடி என்ற தலையணை அணைக்க உடல் தன்னை புத்துணர்வு கொள்ள ,இதயம் காவலராக எட்டு மணிநேர கொடுப்போமே..

தூக்கம் இல்லா விழிகள் சொல்லும் உடல் அவதியை..

தினம் தினம் காதல் கொள்வோம் தூக்கத்தோடு.

தூக்கம் ஒரு வரம். அதுவே மிகுந்தால் பாரம்.அதுவே குறைந்தால் மந்தாரம்

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


தூக்கம்!


அனைத்தையும் மறக்க வைக்கும் டானிக்;

உடலுக்கும, மனதுக்கும் உயிரூட்டும் மேஜிக்!


இரவின் மடியில் தரும் மறுநான் ஊக்கம்;

பகலில் படுக்கை தருவதோ உடலில் வீக்கம்!


தினந்தோறும் களைத்த உடல் ஏங்கும் இந்த நேரம்;

பணந்தேடி மனிதர்கள் சில துறக்கின்றனர் இந்த வரம்!

படமும் கருத்தும் by Veena Shankar

 


 துயிலாதவனோடு துயில்பவனின் கரம் சேர்வது இன்னும் துயிலத்தான்


 துயிலும் போது உன்னை நான் அந்நியப்படுத்த


என்னை நீ எழ வைக்க முயற்சி செய்ய


நானும் உன்னை ஸ்பரிசிப்பேன்

காதலால் அல்ல, 


உன் நாபிக் கமலத்திலிருந்து எழும் சப்தத்தை அடக்கி வைக்க


என் தீண்டலால் நீ உன்னை மறந்து அமைதியாய் இருக்க


சிறிது நேரத்தில் நீ

உன் கடமையை ஆற்ற வேண்டி என்னை எழுப்ப 

முயற்சி கொள்ள


இம்முறை என் பலம்

கொண்டு உன் சிரசை

நான் அழுத்தி தொட


நீயும் என்ன செய்வாய்?


அமைதியாய் என் உறக்கத்தை ரசிப்பதே அன்றி

வேறு பாதையும் உண்டோ உனக்கும்?


சொற்ப பொழுதில் ஏதோ உந்துதலில் நான் எழ


மறுபடியும் உன்னை

என் திசையினின்று எதிர்புறமாய் உன்னை திருப்பி உன்னை நான்

கடிந்து கொள்ள 


என் ஆணைக்கு மனமில்லாமல் நீயும் திரும்பி கொள்ள


என் அவதியை புரிந்து கொண்டவனாய் என்னைப் பார்த்து நீ

ஏளனமாய் சிரிக்க


நாளையும் உன்னை நான் தேடுவேன் என்ற நம்பிக்கையில்

மீண்டும் துளிர விடுவாய் என் கடிகாரமே!


என் துயிலையும் மதித்து நாளையும் வருவாய் சப்தமிட,

சப்தமில்லாமல் துயிலும் எனக்காக


 எங்கோ ஓர் மூலையில் இருந்து மனதால் மட்டுமே மனிதன் பிறருக்கு வாழ்த்து சொல்ல,


பின் கடிதப் போக்குவரத்து உயிர் பெற


படிப்படியாய் வாழ்த்து அட்டைகள் பகிர


தொலைபேசியும் சினேகமாணது


விரைவில் அதுவும் மடிந்து போக

வசமானது அலைபேசி மனிதனிடம்


துயிலின்றி மனிதன் விஞ்ஞானத்தை வளர்க்க 


காலமும் உறக்கம் கொள்ள முடியாமல் தவிக்க


எதை நோக்கி செல்கிறது மனிதப் பயணம்?


கட்டிலில் வீழ்ந்தவுடன் துயிலாமல் புரண்டு கிடக்கும் நேரமும் கொள்ளும் வெற்றி யாது?


காலத்திற்கு ஏற்ப உறக்கம் கொடுக்கும்

புத்துணர்ச்சியை புறந்தள்ளி கடிகாரத்தை அமைதிப்படுத்தும் முயற்சியும் ஏன்?


காலமும் கடிகாரமும் சொல்லா விடையை நம் மனம் சொல்லும் சரியான உறக்கம் வேண்டுமென்று

Saturday, February 17, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 



நேர்கொண்ட பார்வையாக கண்கள் இழுக்க ,எதிரே இருப்பவர் கண்கள் கூச....
உடல் முழுக்க வரிகள் அதை கூர்ந்து பார்க்க கூசும் கண்கள்..
இமை கொட்டாமல் காணும் விழியில் வடியும் கருமை .
எதை அள்ளி மையிட்டாயோ..
மையல் கொள்ள தூண்டும் அழகு.


படமும் கருத்தும் by Veena Shankar

 


 முகத்தில் கோடுகள் வளைந்து இருந்தாலும் 

பார்வை மட்டும் நேரே

என் பாதையிலே


 வலமுமல்ல இடமுமல்ல என்

வளைந்த கோடுகள்

வளரவே துடிக்கிறது 

என் பௌதீக வளர்ச்சியால் மனிதனின் ஆசையை போல 

சுருக்கங்களை கொண்டது அவன் மனது போல


 காட்சிகள் பல என் கண் முன்னே இருந்தும்

நானும் 

காட்சியாக்கப்பட்டேன் உயிரியல் பூங்காவிலே


என் வண்ணக்கோடுகளை

எண்ண எண்ணி தோற்றுப் போனதால்

நிரந்தரமானது கருப்பு வெள்ளை என்ற இரு

வண்ணக் கோடுகள்


வரியும் வரமாயின

விழியும் வழியாகின

என் தோற்றம் கொண்டு நான் தோற்றுப் போகாமலிருக்க


 பரியின் இனமே நானும்

விரைவாக ஓட முடியாவிட்டாலும்


பரியின் இனமே நானும்

கடிவாளம் இல்லாவிட்டாலும்


பரியின் இனமே நானும்

இரு வண்ணக் கலவை கோடுகள் உடலை பிரித்து காட்டினாலும்


பரியின் இனமே நானும்

போர்க்களம் காணா விட்டாலும்


பரியின் இனமே நானும்

சுமையை ஏற்காவிட்டாலும்


பரியின் இனமே நானும்

உங்கள் விழி திறந்து என் விழியையும்

என் உடற் கோடுகளை விலக்கியும் பார்த்தால் விளங்கும் என் எண்ணம்


என்றாவது நானும்

 களம் காண்பேன் என்ற உறுதியோடு

படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


வரியும், விழியும் சங்கமம்😎 

வீரயம் பொங்கும் நிச்சயம்🙌


 கருப்பில் வெள்ளையா?

வெள்ளையில் கருப்பா?


கண்களில் சோகமா?

சோகத்தில் கண்களா?


எதிர்பார்ப்பில் ஏக்கமா?

ஏக்கத்தில் எதிர்பார்ப்பா?


வனப்பில் பெருமிதமா?

பெருமிதத்தில் வனப்பா?


படித்ததால் பிடித்ததா?

பிடித்ததால் படித்ததா?


கவிதையால் வரிகளா?

வரிகளால் கவிதையா?

படமும் கருத்தும் by Kiruthika

 


எனது கருப்பு வெள்ளை வரிகள் தான் என்றாலும் எண்ண முடியவில்லையே என்னால்..!!..

நீங்களாவது கொஞ்சம் எண்ணி சொல்லுங்களேன் ☺️

படமும் கருத்தும் by Shanmugapriya

 


கலர் கலரா 

கேமரா வந்த பிறகும்

இன்னும் 

என்ன 

கருப்பு வெள்ளை 

கேமராவிலேயே படம் 

பிடிக்கிறீங்க 😀

Friday, February 16, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


எறும்புகள் தஞ்சம் தேடி மழலையிடம் சரணம்

 

தாயின் பிரிவால் வாடும் சேய்க்கு ஆதரவு இந்த தலைமை பண்புள்ள எறும்புகள் கூட்டம்


எதைக் கண்டு அச்சம்?


யார் யாரைக் கண்டு பிரமிப்பு?


சிவந்த மேனி கொண்டவர் யார்?


யார் பலசாலி?


யார் யாரை தாங்குவது?


 மனமற்ற இரு இதயங்களின் 

தோல்வியுற்ற வாழ்வாலும்

திறமையற்ற செயலாலும்

பால் மணமற்ற சிசு

 இங்கே ஏங்குகிறது

சுவையற்ற தானும்

வீழ்த்தப்பட்டது 

மரமேற தவறிய எறும்பாலே என்று

Thursday, February 15, 2024

பரந்த வானவெளி by Vidhya Nivash

 


கருத்துக்களை கொட்டவும் நேரமில்லை,கலைத்து எண்ணி அடுக்கவும் நேரமில்லை,கூட்ட,குறைக்க எதுக்கும் நேரமில்லை.ஆனாலும் எதோ எழுத தோணுது.

பரந்த வானில் மேகத்தின் ஊடே மாட்டிக் கொண்ட என்னை கைக்கொடுத்து தூக்கவும் .என் நண்பன் மழை செய்த வேலை இது.

இப்படிக்கு,

 தூக்கத்தில் இருக்கும் சூரியன். 

Wednesday, February 14, 2024

படமும் கருத்தும் by Veena



தன் மனக்குழப்பத்தை தீர்க்க வேண்டி இவள்

மேற்கொண்டாள் நிலவுப் பயணத்தை


இவளின் உஷ்ணத்தை நிலவு கிரகித்துக் கொள்ள தன் நிலையில் தேய்ந்தது அதுவும்


சிறுத்த நிலாவோடு என்ன உடன்படிக்கை?

நாள்பட நாள்பட அதுவும் வளருமே!

உன்னை வருத்தி

நிலவில் உலவினாலும் 

மன அழுத்தம் குறையாது பெண்ணே!

ஓய்வு கொடு உன்

மனதிற்கு

நீயும் சிறப்பாய் இருப்பாய்

வரும் காலத்தில்


 பூமியில் தேடியது கிடைக்கவில்லை

நிலவிற்கு பயணம் கொண்டேன்

தேடியது கிடைத்தது

பூமியில் வற்றிய நீர்

இப்போது நிலவில்


 கடந்தவை பல வருடங்கள் இன்னலோடு என்றானாலும் 

கடப்பவை யாவும் என்றும் சிறப்பே

பயணப்படும் பாதையில் நேர்மை கொண்டால்

Monday, February 12, 2024

வெள்ளி கீறல்கள் by Vidhya Nivash

 


நீலவானில் வெள்ளி ஒளிக்கதிர்கள் கீறிக்கொண்டு பாய்கிறது.அடைமழையின் பின்னே கண்ணை பறிக்கும் சூரிய ஒளி.அடைக்காக்கும் கோழி போல் சூட்டை தேடும் மனம்.குளிரில் உடல் நடுங்க வெயில் போர்வையை தேடும் கோழிகள்.

படமும் கருத்தும் by Veena Shankar

 


பாதத்தில் தெரியும் வளைவுகள் யாவும்

பாதையின் இன்னல்கள்

பாரதத்தின் சுவடுகள்

பயந்து போகாமல்

காத்ததில் பெருமை

பகைமை உணர்வை வளர்ப்பதை விட

புரிந்து பயனடைவதே சரி


பல அடிகள் மாறி மாறி காலை முன் வைப்பினும் அழுத்தம் கொடுப்பது முன்னங்கால் விரல்களுக்கே

பிளவுபட்ட விரல்களின் ஒற்றுமையை பரைசாற்றுவதும் சிறப்பே


 பயணம் நடையென்றாலும் தொட்டது சிகரத்தை

நம்மால் முடியாதது எது?

Sunday, February 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 வயோதிகத்தின் காரணமாய் நிஜ வாழ்வு ஒன்று 

உண்மையாய் கண்ணாடி பிம்பத்தில் 

 பிரதிபலிக்கிறது


 மணமானதிலிருந்து மனதாலும்

 மரணத்தாலும் இணை பிரியா தம்பதிகள்



மாலையிட்டவர்கள் மரணத்திலும் ஒன்றாகி

 புகைப்படத்திற்கும் ஒன்றாக மாலையிடும் தருணமாகி 

சொர்க்கத்தில் ஐக்கியமாகி 

நம்மை பிரம்மிக்க வைக்கும் காதல் ஜோடிகள்


 மணமானதால் பிணமான ஜோடியோ இவர்கள்?

 சாதிச் சண்டையால் உயிர்விட்ட

 காதலர்கள் இங்கே எலும்புக்கூடாய்  

எழ முடியாமல்

காதலுக்கு அழிவில்லை என்பதை 

பிறருக்கு பறை சாற்றவோ இந்த காட்சி?

அதுவும் ஒய்யார ஊஞ்சலில் மிகவும்

கம்பீரமாய்

இனி பறிக்க ஏதுமில்லை என்பது போல்


 இதயம் வேறென்றாலும் நிலை ஒன்றே இப்போது பிறர் காணும் போது


 இறந்த பின் ஆராய்ச்சிக்கு பின்னே உணர முடியும் இதில் ஆன் யார்? பெண் யாரென்று?

இதற்கிடையே எத்தனை ஏச்சுக்கள் பேச்சுக்கள்,

பாலினத்தில் உயர்ந்தவர் யாரென்று!


 வாழ்வின் கடைசி அத்தியாயம் புகைப்படமாக


 மலர்கள் பரிமாறப்பட்டு

மனங்கள் பகிரப்பட்டு

மரணங்களும் இலகுவாய்

பெறப்பட்டதோ?

உல்லாச பூமியில் பிறப்பு

பரிந்துரைக்கப்பட்டு

காவியமாய் மாறியதோ? 

சதையின்றி 

ஓர் உயிர், ஈருடல்

Saturday, February 10, 2024

ஞாயிறன்று ஞாயிறுக்கு ஓய்வு by Vidhya Nivash

 



எங்கும் மழைத்துளி சிந்தி சிதற அள்ளி பிடிக்க ஆளில்லை.ஞாயிறன்று ஞாயிறுக்கு விடுமுறை.மேகங்களுக்குள்ளே போர்த்திக் கொண்டு உறங்க .பனியை தள்ளி பணியாற்றிட வரும் பகலவனுக்கு இன்று பணியற்ற நாள்.நமக்கோ என்றோ ஒரு நாள் பாலையில் மழை பெய்யும் அற்புத நாள். அதுவும் ஞாயிறன்று இரட்டை மகிழ்ச்சி.

Friday, February 9, 2024

மந்திரமா by Vidhya Nivash

 


வண்ண வண்ண புள்ளிகளில் உருவாகிய மங்கையின் ஓவியம்.பார்க்க பார்க்க அழகு.அவள் ஒரு புரியாத சாகசம். அதில் பயணிப்போர் அதை ரசிக்கவும் முடியும் ,சில நேரம் பயமென்ற பிணியும் ஒட்டிக்கொள்ளும் அவள் எப்போது மாறுவாள் என்று அவளுக்கே தெரியாதே.உடலை அசைத்தால் சிதறும் முத்துக்கள் .அதை அள்ளி தெளிக்க, தெறிக்க ஓடும் பயம்.மந்திரமோ தந்திரமோ இல்லை அது ஓர் உயிர்.உன்னில் கலந்ததை பிரிக்க பிரிக்க அது பயமே.

மந்திரமா by Veena Shankar

 


தாரகையின் உடல் என்ன மந்திரமா?


பல வண்ணங்களில் மிளிர்ந்து நம்மை வாட்ட தந்திரமா?


அடிமைப் பெண்ணுக்கு கிடைத்த சுதந்திரமா?


அவள் அழகை காண தூக்கமும் வந்தி(டு)ருமா?


அவள் மேல் மையல் கொண்ட பின் மாயமும் தந்திடுமா?


வாராக் கடன் போல ஏய்ப்பு செய்வதால் மனம் வருந்திடுமா?


அவள் நடையும் நடனமும் கண்டவரை கொளுத்திடுமா?


அவள் மேனியை கண்டதும் உடலும் கொழுத்திடுமா?


நேர்பார்வையால் நம்மை சிலிர்க்க வைத்திடுமா?


அவள் வண்ணமும் வாலிபமும் நம்மை கவர்ந்துடுமா?


 வாழ்க்கை வட்டத்தில் வளைந்து , நெளிந்து, தெளிந்து வாழ அது கவின் பெறும்

 ஓவியமும் நடனமும் கற்றவர் கலையில்


அவள் அணிந்துள்ளது வண்ணமிகு ஆடையா?


அல்லது


நாகரீக உலகின் பெரும் சவாலா?


அல்லது 


அணிந்தது போல் காட்சி கொடுக்கும் மாயமா?


காண விழையும் மக்கள் யாருமில்லை

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...