Tuesday, February 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



இரும்பு இதயத்தை கட்டிப் போட 

இரும்பு வேலி தேவையில்லை

கடந்து வந்த பாதையின் கனத்தை அறிந்த இதயத்திற்கு


உதிரம் சிந்தினாலும்

இதயம் பூட்டினாலும்

சிகரம் தொட உண்டான 

 சுவடுகள் உண்டு

இந்த இருவரின் இழப்பால் கொண்ட தியாகத்தால்


 உன் ஓட்டம் நின்றால்

ஆட்டம் கொள்ளும் வாழ்க்கை

அதனாலே உன்னை

இரும்புக் கரம் கொண்டு அடைத்தேன்

உன்னிலிருந்து என்னை விடுவிக்காமல் இருக்க


உதிரம் சிந்தியபடி செல்லும் இதயம் அடைக்கப்பட்டது ஓர்

பெட்டிக்குள்ளே

அடுத்தவரிடம் தஞ்சம் கொள்வதற்காக

ஆனால் என் காதல் மட்டும் விலங்கிடப்பட்டது என்னவள் உயிர் பிரிந்ததால்


தேடுவோர் பலர் இருப்பினும்

அடைபடுவது ஒருவரிடத்திலே


உதிரம் தாங்கிய இதயம் சொல்லும் ஒரு கோடி கதைகள்

வாழ்க்கையில் 

முற்றுப் பெறாமல் தோற்றது எவ்வாறு என்று.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...