Sunday, February 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



பல வண்ணக் கலவை

 மட்டுமல்ல இது

நம் எண்ணமும் உணர்ச்சியும்

அதன் விளைவும் 

கொண்ட கலவை


கவலை மறக்க, மறைக்க தூரிகையும் 

தூதாகும் வித்தகர் அல்லாதவர்களுக்கு


பறக்கும் தன்மை இருந்தாலும் கையிலுள்ள 

நூலை விட்டு பிரிந்தால் மட்டுமே

வெற்றி பெறும்

இப்பயணம் சுதந்திரமாய்


உணர்ச்சி என்பது இல்லாமற் போனால்

ஜடப்பொருளே! 

அடுத்தவருக்கும் பாரமாய்


தாங்கும் நிலமும் வெடிக்கும் நிலை உண்டு

மண்ணில் ஈரம் உள்ளவரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...