Wednesday, February 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


உளமாற கடிதம் எழுதி வளர்த்த காதல் இங்கே கசந்து விட்டது

என்னுள் குருதியும் கசிந்து விட்டது

தேடியும் பார்க்காதே

என்னுள் நீயில்லை


என்று உனை நான் நினைக்க தொடங்கினேனோ அன்ற நான் புதைந்து விட்டேன் உன்னுள்

அதை நீ பிரித்தெடுத்த வேளையில் தான் என் 

இதயம் நொறுங்கியது


 லென்ஸ் வைத்து பார்க்க முடியாவிட்டால் அவள் இதயத்தை உடைக்கும் அளவுக்கு ஏதாவது நல்லது செய்தால்...


 கனிந்த இதயம் செந்நிறமானதே

தேடும் விழியை தடுத்து விடு

காய்ந்த இதயத்தை

தாங்கும் சக்தி எனக்கில்லை


அகக் கண் கொண்டு தேடினால் மட்டுமே 

வெளிப்படும் பெண்ணின் இதயம்

இந்த பூத்க்கண்ணாடி எம்மாத்திரம்


 பூதக் கண்ணாடி இல்லாமலே கசிந்தோடும் குருதியை காண முடிகிறதே, காதலியின் பால் கொண்ட அன்பும் உருகுதே,

ரணம் மட்டுமே நிரந்தரமாய் பெருகுதே,

தேவை ஓர் புகலிடம் 

வஞ்சனை இல்லா இதயத்தை தேடி நானும் அவ்வழியே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...