Saturday, February 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 முகத்தில் கோடுகள் வளைந்து இருந்தாலும் 

பார்வை மட்டும் நேரே

என் பாதையிலே


 வலமுமல்ல இடமுமல்ல என்

வளைந்த கோடுகள்

வளரவே துடிக்கிறது 

என் பௌதீக வளர்ச்சியால் மனிதனின் ஆசையை போல 

சுருக்கங்களை கொண்டது அவன் மனது போல


 காட்சிகள் பல என் கண் முன்னே இருந்தும்

நானும் 

காட்சியாக்கப்பட்டேன் உயிரியல் பூங்காவிலே


என் வண்ணக்கோடுகளை

எண்ண எண்ணி தோற்றுப் போனதால்

நிரந்தரமானது கருப்பு வெள்ளை என்ற இரு

வண்ணக் கோடுகள்


வரியும் வரமாயின

விழியும் வழியாகின

என் தோற்றம் கொண்டு நான் தோற்றுப் போகாமலிருக்க


 பரியின் இனமே நானும்

விரைவாக ஓட முடியாவிட்டாலும்


பரியின் இனமே நானும்

கடிவாளம் இல்லாவிட்டாலும்


பரியின் இனமே நானும்

இரு வண்ணக் கலவை கோடுகள் உடலை பிரித்து காட்டினாலும்


பரியின் இனமே நானும்

போர்க்களம் காணா விட்டாலும்


பரியின் இனமே நானும்

சுமையை ஏற்காவிட்டாலும்


பரியின் இனமே நானும்

உங்கள் விழி திறந்து என் விழியையும்

என் உடற் கோடுகளை விலக்கியும் பார்த்தால் விளங்கும் என் எண்ணம்


என்றாவது நானும்

 களம் காண்பேன் என்ற உறுதியோடு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...