Friday, February 2, 2024

போதும் பெண்ணே by Veena Shankar

 


போதும் பெண்ணே!


விழி மூடினாலும் உன் முகம் என் இதயத்தில் மலரக் கண்டேன்


செவியடைத்து கொண்டாலும் உன் குரலொலி என் நினைவை மறக்கக் கண்டேன்


சுவாசம் அடைத்து நின்றாலும் உன் மணம் என் நாசியை துளைக்கக் கண்டேன்


இதழ்கள் விரிக்காத போதும் உன் புன்னகை என் இதழை விரிக்கக் கண்டேன்


இறுக பற்றிய கரங்கள் உன் அசைவால் தளரக் கண்டேன்


நேரே நின்ற கால்கள் உன் வரவால் தன்னிலை மறக்கக் கண்டேன்


சீரான இதயத் துடிப்பும் உன் மொத்த அழகில் நீரில்லா மீனாய் துடிக்கக் கண்டேன்


தெளிவில்லா மனதோடு நான் உலவ உன் பார்வையே விடையாகக் கண்டேன்


ஐவிரல்கள் படபடக்க


கண்கள் துடிதுடிக்க


நாசிகள் பரபரக்க


மேனி எங்கும் சிலுசிலுக்க


நாவில் வார்த்தைகள் வழவழக்க


நானும் மனதால் வலுவிழக்க


நீ மட்டும் என்னெதிரே பளபளக்க


உன் நிழலும் மினுமினுக்க


இரவில் ஆசைகள் தகதகக்க


போதும் பெண்ணே!


என் நினைவில் இருந்து அகன்று விடு


நான் உன் காதலன் அல்லன் இப்போது


சமாதியில் அடைக்கப்படாத சவமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...