Thursday, February 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 



 யாரும் தீண்டா மங்கை உதட்டில் வண்ணமிட்டு காத்திருப்பது எதற்காக?

திக்கு தெரியாத காட்டில் விடப்பட்ட

 அபலை போல் நானும் காத்திருக்க

என்னை அலைபேசியில் படம்

 மட்டும் பிடித்து போகும் அவசியம்

 என்ன மனிதர்களே?


 சரிந்து விழுந்த என்னை காப்பாற்ற

 ஆளில்லை என்றாலும் கைப்பற்ற

 துடிக்கும் மனிதர்கள்

எடைக்கு மட்டுமே விடை போவேன் என்பதால்

என் உண்மை பலம் அறியாதவற்கும் விடையானேன் அன்று



வாய் திறந்து பேசாத நான் 

பதிலானேன் காதலர்களுக்கு என் வாய் திறந்து பகிர்ந்ததால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...