Thursday, February 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


போராடி பெறும் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு

விரித்த சிறகோடு பரந்த மனதோடு

கவர்ந்து செல்லும் காற்றோடு 

கலைந்த மேகத்தோடு

கரைந்து செல்லும் காகமே!

நீயும் அடைபட்டாய் அமாவாசைக்காக இந்த மானிடனிடம்

அவன் உன்னை வைத்து பொருள் ஈட்ட


 உன்னை அடைத்து வைத்து மகிழ்ந்த நான்

உன் மகிழ்ச்சியை உன் விடுதலையில் கண்டு வியந்தேன்

நானும் முயற்சிக்கிறேன்


பாசம் எனும் கூண்டில் 

என்னை அடைத்துக் கொள்ளாமல் வாழ


பிறரை எதிர்பார்க்காமல் வாழ


 என் கை உனை பற்றியதால்

கூண்டில் அடைப்பட்டாய்

நானும் மெய் மறந்தேன் உன் துணையில்


என் கரங்கள் கொண்டு உனை நான் விடுவித்ததும் தான் கண்டேன் என் மனம் இலகுவானதாய்


பற்றும் போது இருக்கும் ஆவல்

 அதை தொடரும் போது விலக்குவதேன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...