Monday, February 5, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


இருட்டில் ஒளிர்ந்த ஒளியில் மெய் மறந்து

தன் மனதின் ஆறுதலுக்காக ஓர் சுகம் தேடி

அந்த சுவாசத்தில் வாசமானது அவள் மட்டுமல்ல 

வேடிக்கை பார்ப்போரும் தான், அவள் நளினத்தின் கண்


 வலியை மறக்க வழி உண்டெனில்

வழி மாறிப் போக வேண்டியிருக்கும்

வளி உன் திசை பார்த்து வீசினால்

விளைவும் மாறும்

விலைப் பேசிட விழையாதே ஞாலத்தை

பசியும் மருந்தாகும் பாதை சிறக்க


புசிக்க வேண்டியதை மறந்து

பசிக்காக புகைக்க

புகையும் பகையாகும் என்றறிந்தாலும்

ஈன்றவர் முன்னே கூட

உன்னை இழிவுபடுத்தும்

இந்த நிலையும் தேவைதானா?

மெய் மறந்து சுவைத்தாலும் அது

மாயை தானே?

விழி மூடி அதில் லயித்தாலும்

உன்னை விளிப்போர் முன்னும் ஏளனமே!

கற்பனை உலகில் உலவ 

கருவியும் இது தானோ?

மாறா சோகம் மறைய

மறதியும் வேண்டுவோர் உளர்

இவ்வுலகில்

தேடு! நாடு! உன்னில் உன்னை

பலன் அறிவாய் பலம் பெறுவாய் பயம் விலக்குவாய்


 வாழ்வில் தேடிய ஒளி இங்கே தவறுதலாக மாற்றம் கண்டது பெண்ணிடத்திலே


சுடர் கொடுக்கும் ஒளியும்

சூடிக் கொடுத்த கொடியும்

தெறிக்க விடும் தன்

இயல்பாலே நெருப்பாய்


 பெண்ணின் தனித்துவம் பெறுவதிலும் பெற்றதிலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...