Sunday, February 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 துயிலாதவனோடு துயில்பவனின் கரம் சேர்வது இன்னும் துயிலத்தான்


 துயிலும் போது உன்னை நான் அந்நியப்படுத்த


என்னை நீ எழ வைக்க முயற்சி செய்ய


நானும் உன்னை ஸ்பரிசிப்பேன்

காதலால் அல்ல, 


உன் நாபிக் கமலத்திலிருந்து எழும் சப்தத்தை அடக்கி வைக்க


என் தீண்டலால் நீ உன்னை மறந்து அமைதியாய் இருக்க


சிறிது நேரத்தில் நீ

உன் கடமையை ஆற்ற வேண்டி என்னை எழுப்ப 

முயற்சி கொள்ள


இம்முறை என் பலம்

கொண்டு உன் சிரசை

நான் அழுத்தி தொட


நீயும் என்ன செய்வாய்?


அமைதியாய் என் உறக்கத்தை ரசிப்பதே அன்றி

வேறு பாதையும் உண்டோ உனக்கும்?


சொற்ப பொழுதில் ஏதோ உந்துதலில் நான் எழ


மறுபடியும் உன்னை

என் திசையினின்று எதிர்புறமாய் உன்னை திருப்பி உன்னை நான்

கடிந்து கொள்ள 


என் ஆணைக்கு மனமில்லாமல் நீயும் திரும்பி கொள்ள


என் அவதியை புரிந்து கொண்டவனாய் என்னைப் பார்த்து நீ

ஏளனமாய் சிரிக்க


நாளையும் உன்னை நான் தேடுவேன் என்ற நம்பிக்கையில்

மீண்டும் துளிர விடுவாய் என் கடிகாரமே!


என் துயிலையும் மதித்து நாளையும் வருவாய் சப்தமிட,

சப்தமில்லாமல் துயிலும் எனக்காக


 எங்கோ ஓர் மூலையில் இருந்து மனதால் மட்டுமே மனிதன் பிறருக்கு வாழ்த்து சொல்ல,


பின் கடிதப் போக்குவரத்து உயிர் பெற


படிப்படியாய் வாழ்த்து அட்டைகள் பகிர


தொலைபேசியும் சினேகமாணது


விரைவில் அதுவும் மடிந்து போக

வசமானது அலைபேசி மனிதனிடம்


துயிலின்றி மனிதன் விஞ்ஞானத்தை வளர்க்க 


காலமும் உறக்கம் கொள்ள முடியாமல் தவிக்க


எதை நோக்கி செல்கிறது மனிதப் பயணம்?


கட்டிலில் வீழ்ந்தவுடன் துயிலாமல் புரண்டு கிடக்கும் நேரமும் கொள்ளும் வெற்றி யாது?


காலத்திற்கு ஏற்ப உறக்கம் கொடுக்கும்

புத்துணர்ச்சியை புறந்தள்ளி கடிகாரத்தை அமைதிப்படுத்தும் முயற்சியும் ஏன்?


காலமும் கடிகாரமும் சொல்லா விடையை நம் மனம் சொல்லும் சரியான உறக்கம் வேண்டுமென்று

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...