Saturday, March 11, 2023

ஓட்டுநர்களுக்கு அர்ப்பணம் by Veena Shankar

 


ஓட்டுநர்களுக்கு அர்ப்பணம்


அமர்ந்த கோலத்திலே இருந்து கொண்டே இரு கைகளையும் மாறி மாறி இயக்கி கொண்டும் 


கூட்டம் நிரம்பி வழியும் சாலையாகட்டும் கொண்டை வளைவு கொண்ட பாதையாகட்டும் 


இரு இணையா கோடுகளான இரும்பு தண்டவாளமாகட்டும்


ஓயாத அலைகளாகட்டும் துயிலாத பனிப்பாறைகளாகட்டும்  


போக்குவரத்து நெரிசலில்லாத வானவூர்தியாகட்டும்


தற்போதைய வாடகை இரு சக்கர வண்டியாகட்டும்


அதை திறம்பட ஓட்டும் ஓட்டுனர்களே !


மக்களின் உயிர் உங்கள் கையிலென்றாலும் நீங்கள் துயில் கொண்டால் மரணம் பயணிகளான எங்களுக்கே 


நீங்கள் கவனக்குறைவானால் இழப்பு எங்களுக்கே

 

நெடுநேர பயணத்திலும் சளைக்காமல் ஓட்டும் உங்களுக்கே எங்கள் ஓட்டு தேர்தலில் நிற்காமல் இருந்தாலும்


சாலையில் நடக்கும் விபரீதங்களுக்கு சம்பந்தமில்லாமல் நீங்கள் தொடர்புபடுத்தபடுவதும் 


குறுக்கே வரும் மனிதர்களும் எதிர்வரும் கால்நடைகளையும் சாலையில் அனுசரித்து போவதும்


வானில் இயந்திரக் கோலாறாலும் சிக்னல் கிடைக்காததாலும் வரும் குழப்பங்களும்


கடலில் திடீரென்று வரும் கடற்கொள்ளையர்ளின் கையில் சிக்காமல் சமாளிப்பதும்


இருக்கை இருப்பதற்கே அன்றி இறப்பதற்கல்ல என்பதை உணர்ந்தும் மற்றவருக்கு உணர்த்துவதும் உங்கள் தனித்துவம்


அடிக்கும் வெயிலையும் விடாது வரும் மழையையும் வீசும் காற்றையும் தடம் மாறும் புயலையும்

ஓடி வரும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது செயல்படுவதால் இயற்கையின் நண்பர்கள் நீங்கள்.


உங்களுக்கு உங்கள் திறமைபடியும் பணியின்படியும் மாற்றம் இருந்தாலும் நீங்கள் எந்த ஊர்தியை எங்கே இயக்கினாலும் உங்கள் பெயர் மாறாது "ஓட்டுனர்களே "

நீங்கள் எங்கள் மனத்தெய்வங்களே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...