Monday, March 6, 2023

மனத்(தி) தோட்டம் by Veena Shankar

 மனத்(தி) தோட்டம் 



ஒரு கட்டைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் அபர்ணா. தன் வண்டியை இயக்கி நேரே செடிகள், மரக்கன்றுகள் விற்கும் இடத்திற்கு சென்றாள் . முன்பே அங்கு செல்ல திட்டமிட்டு அவள் வேலை பளுவால் போக முடியவில்லை. அங்கே பூச்செடிகள், பன்னீர், புங்கை, மா, கொய்யா என பலவித மரக்கன்றுகளையும் வாங்கினாள். அப்படி இப்படி என்று மொத்தம் ஐயாயிரம் ரூபாய் வரை ஆனது. அவள் கொண்டு வந்த பை போதவில்லை என்பதால் செடியை விற்றவரே அவளுடைய விலாசத்தை கேட்டு வாங்கி வீட்டிற்கு வந்து இறக்குவதாக தெரிவித்தார். அதற்கு ஒப்புக்கொண்ட அபர்ணா தன்னுடைய இல்லத்தின் தோட்டத்தில் அதற்கான இடத்தில் அவைகளை நட்டு நந்தவனம் போல் அமைக்க எண்ணி கொண்டே வீடு திரும்ப வண்டியை இயக்கினாள். அவள் வருவதற்கு முன்னே அந்த வண்டி அவள் வீட்டில் நின்றிருக்க, அவள் கணவனும் அக்கம்பக்கத்தினரும் விசாரித்து கொண்டிருக்க, அபர்ணா ஐயாயிரம் ரூபாய்க்கு செடி வாங்கியதை கண்டு மலைக்க, அந்நேரம் " இந்த மரம் எவ்வளவு ரூபாய்? " என பன்னீர் மரச்செடியை கையில் வைத்து ஒருவர் கேட்க, "அதுவா ஐயாயிரம் ருபாய் " என்று அபர்ணா சொல்ல, வந்தவர் திக்குமுக்காடி இதுக்கா இவ்வளவு ரூபாய் என மலைக்க, பக்கத்திலிருந்த சுப்பு, முதலாளி பார்க்கிறார் என்று சொல்லி அபர்ணாவை கிள்ள, அவளும் தன்னிலை வர , முதாலாளி முறைப்பதைப் பார்த்து வந்தவர் என்ன கேட்டார் என தெரியாமல் விழித்து அவர் கையிலிருக்கும் மரச்செடியை பார்த்து அசடு வழிய, வந்தவர் மீண்டும் விசாரிக்க, சரியான விலையை சொன்னாள் அபர்ணா.  


வாயை கட்டி வயித்தை கட்டி அவள் வாங்கிய இடத்தில் வீடு கட்ட நினைத்த வேளையில் அது நீர் வரத்து பகுதி என்று சொல்லியும் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என அதிகாரிகள் சொல்ல அபர்ணாவுக்கு இடி விழந்த மாதிரி இருந்தது. தனக்கென இடம் வாங்கி வீடு கட்டி தோட்டம் அமைக்கவிருந்த அபர்ணா, அது முடியாமற் போனதால் தன் ஆசையை இப்படி தோட்டசெடி விற்கும் இடத்திலாவது வேலை செய்து நிறைவேற்றி கொள்ளலாம் என நினைத்தே அங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாள் .


எண்ணம் ஈடேற பாதையும் மெய்யானதாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...