Saturday, March 11, 2023

காலை பொழுதும் காட்சிகளும் by Vidhya Nivash

 


அழகான காலை பொழுதில் விடிந்தும்

 விடியாமலும்  நீண்ட இடைவெளிக்கு

 பிறகு அலைகளை காணும் ஆசையில்

 உள்ளத்தை கவர்ந்த பாடல்களுடன் 

நினைவுகளை தட்டிவிட்டு சாலையின்

 ஒரு புறம் நாளை முடித்து தூக்கத்தை

 கண்ணில் சுமந்த தோழர்களும்

 மறுபுறம் நாளை தொடங்க கண்ணில்

 உற்சாகத்துடன் சில தோழர்களும்

இதற்கு நடுவில் விடுமுறையை

 கழிக்க ஞாயிறையும் அலைகளையும்

 ஒரு சேர ரசிக்க சிலரும் எட்டுக்கால்

 பாய்ச்சலில்  சிலரும் இதற்கிடையில்

 வானில் பறவைகளுடன் ஏறி

இறங்கி விளையாடும் வானூர்திகளும்

நிலா மெல்ல மறைய மெல்ல வந்தார்

 ஞாயிறு இறைந்து கிடந்த இரையை

 மொய்த்த கடற்பறவைகளுடன்

 நாங்களும் கலந்தோம்




1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...