Monday, March 6, 2023

புது விதை by Vidhya Nivash


 முற்றிலும் வித்தியாசமான மகளிர்

 தின கொண்டாட்டம் எண்ணங்கள்

 எல்லாம் ஒன்று கலக்க எந்த 

வேற்றுமையும் இன்றி ஒரே

 அதிர்வலையில் மனங்கள் பேசிட

 எழுத்தில் கண்ட முகங்கள் முதன் 

முறையாக நேரில் கண்டு அதிசயிக்க..

 நடையிலும் செயலிலும் கம்பீரமாக

 ஆனால் பழகினால் கனிவுமிக்க

 அறுவதிலும் ஆசைகளை அரங்கேற்ற 

துடிக்கும் அன்னையருக்கு பிறந்த

 மான்குட்டிகள் அல்ல புலிகுட்டிகள் ..

கேட்ட மாத்திரத்தில் ஆடி அதிசயித்த

 மங்கையர் என்னவென்று சொல்வது

 ஒருவருக்கு ஒருவர் பாராட்டி 

உற்சாகப்படுத்தி ..

பல நாள் கனவு நிறைவேற பல

 மனங்கள் ஏற்றுக்கொண்ட

 உற்சாகத்தில் ஒரு பேச்சாளராக 

உணர்ந்த தருணம் உங்கள் 

 ஆதரவில் வந்தது என்ற நன்றி

 உணர்வுடன் பதிவிடுகிறேன். புது

 பயணத்துக்கான விதை

 விதைக்கப்பட்டது..

 

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...