Tuesday, March 7, 2023

கரும்பலகை by Veena Shankar



சரியாக எழுதினாலும் தவறாக எழுதினாலும் அழித்தே பழகிய களம் கரும்பலகை

கை வரைந்த படமா

நமக்கு வாழ்க்கை பாடமா 


வகுப்பறையில் ஆங்கே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது கரும்பலகை


வரைபவர் யாராகிலும் தன்னை திருத்திக்கொள்ள இடம் கொடுக்கும் கரும்பலகை


எத்தனை முறை நின்றிருப்பர் உன் முன்னால் பாடம் தொடர முடியாதபடி


சுண்ணக்கட்டியோடு வெண்மைக்கு கருமை என்ற பொருத்தத்தோடு


காகிதம் வாங்க வழியில்லா காலத்திலும் வாஞ்சையோடு அனைவரையும் ஏற்றுக்கொண்டாய்


அறிவை உயிர்ப்பித்தாய் முதல் மாணவனுக்கு அங்கீகாரம் தந்தாய்


காலம் உன்னை மாற்றியிருந்தாலும் நீ இல்லாத பள்ளியில்லை, கோயிலில்லை


வண்ணம் பல கொண்டாலும் சொல்லும் கருத்து ஒன்றே தான்


உன்னுள் விந்தை கொண்டாய் உருவத்தில் விருத்தியும் கண்டாய்


சில நேரம் அறிவிப்பு பலகையாய் நீ மாறியதும் உண்டு


இடதுபுறம் அன்றைய தேதியும் வகுப்பும்

மத்தியில் திருக்குறளும்

வலதுபுறம் மாணவர் எண்ணிக்கையும் வருகைபதிவும்

உன்னுள் கொண்டாய்


நடுவில் ஆசிரியருக்கான களம் என்றாலும் அழகான கையெழுத்து கொண்ட மாணவரின் எழுத்தும் பதித்தாய்


அலாதி தான் நான் தலைவியாய் இருக்கும் போது உன்னை தீண்டுவதும்


புது வகுப்பிற்கு வரும் போது உன்னை மட்டுமே முதலில் வருடுவார் ஆசிரியர்


தூது போன கதையும் உண்டு உன்னால் துயில் கொண்ட நினைவும் உண்டு


வருடம் ஒருமுறை சாயம் பூசிக் கொண்டு ஹோலி பண்டிகையையும் கொண்டாடுகிறாய்


உன் நினைவை மறவாத மாணவி நான் என் நலனை நீ கருத்தில் கொண்டு தேய்ந்ததால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...