தோட்டம்
"தோட்டம் " என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டோம் உங்களை
பல உயிரினங்கள் சங்கமிக்கும் இடமும் அதுவே உங்களால்
தோற்றத்திலும் வகையிலும் முரண்பட்டாலும்
ஒற்றுமை சொல்லப்படுவதில்லை உங்களின்
வானத்து நிலவும் வெட்கம் கொண்டு சிரிப்பது உங்களாலே
சூரியன் தன் கதிர்களை விரித்து காட்டினாலும் பதிலுக்கு விளைச்சலில் சாதனை காட்டும் குணமும் உங்களுடையதே
மழை வேண்டுவதும் அது பொழிவதும் உங்களுக்காகவே
மனிதன் மண்ணை செரிப்பூட்டுவதும்
வளர்ச்சி கொள்ளும் உங்களுக்கே
நிழலும் பசுமையும் ஒருசேர அமைந்திருப்பது உங்களிடமே
வழிப்போக்கரும் பறவைகளும் இருப்பிடம் கொள்வது உங்களிடத்திலே
வண்டுகளின் ரீங்காரமும் புழு, பூச்சிகளின் சங்கமும் வெற்றியே உங்களுக்கும்
பல காதலும் ஊடலும் பயணிப்பது உங்களோடே
அறியாப் பருவம் தெரியா மனத்தோடு இருந்ததும் என் தவறே, மன்னிப்பீர்களா? கேட்கிறேன் உங்களை!

No comments:
Post a Comment