Friday, March 3, 2023

அன்பின் எல்லை எது வரை by Veena Shankar

 அன்பின் எல்லை எது வரை



அடைத்து தாழிட்ட வீட்டிலிருந்து பிள்ளைகள் கத்தி கூப்பாடு போட, அவர்களுடைய அம்மாவும் சாவியை தொலைத்து விட, வீட்டிலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற அம்மா எத்தனிக்க, மேலும் அழும் குரலில் குழந்தைகளிடம் தன் இயலாமையை தெரிவிக்க, அதை தெரிந்து கொள்ள இயலாத நிலையில் பிள்ளைகள் இருக்க, இதற்கு நடுவே பிள்ளைகளை பிரிந்து இரு மாதங்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து திரும்பிய தந்தை பிள்ளைகளை அரவணைக்க எண்ணி காத்திருக்க, சாவி தொலைந்த விசயத்தை சட்டென்று சொல்லாமல் சுற்றி வளைத்து அம்மா சொல்ல, கோபம் கொண்ட அப்பா பிள்ளைகளை பக்கம் சென்று பார்க்க முடியாததை நினைத்து கலங்க , இதற்கு காரணமான மனைவியை வாய்க்கு வந்தபடி திட்ட, அது வரை பம்மி இருந்த மனைவியோ கணவனின் அதீத சப்தத்திற்கு மிராண்டாலும் தானும் சளைத்தவளல்ல என்று எதிர் வாதம் செய்து கணவனை பார்த்து கத்த, அது வரையிலும் அழுது கொண்டிருந்த பிள்ளைகள் பெற்றோரின் சப்தத்தையும் சண்டையையும் கேட்டு அமைதி காக்க, கடைசியாக என் மகன் ஒரு கொட்டங்குச்சியில் ஒரு கோப்பை பாலை வைத்து தாய் பூனைக்கும் குட்டிகளையும் சமாதானப்படுத்த எண்ணி மொட்டை மாடிக்கு செல்ல, அவனைக் கண்டதும் அப்பா பூனை பயந்து ஓட, தாய் பூனை மட்டும் அங்கேயே இருந்து குட்டிகளை தன் வசப்படுத்தி கொள்வதற்காக நிற்க, அதற்குள்ளாக தபால்காரர் ஒரு தபாலை தாய் பூனையிடம் கொடுக்க எழுத படிக்க தெரியாத தாய் பூனை அதை படித்து காட்டும் படி என் மகனிடம் சொல்ல , படித்த அவனும் விசயத்தை தாய் பூனையிடம் சொல்ல, தனக்கும் விவாகரத்து செய்ய விருப்பம் என்று சொல்லி பதில் கொடுக்க என் மகனிடம் மன்றாட, அவன் விவரத்தை ஓடி வந்து என்னிடம் சொல்ல பைத்தியமானது நாங்கள் இருவர் தான். ஏனென்றால் கீழே வந்த என் பையன் என்னை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று காட்டுவதற்குள் "மியாவ் மியாவ் " என்று செல்லமாக கணவன் பூனை மனைவியை அழைத்ததும் மனம் விரித்து சமாதானம் கொண்டு கணவனிடம் தஞ்சமானது மனைவி பூனை. 


விழித்தும் காத்தும் கிடந்தன குட்டிப் பூனைகள். 


பெற்றோரின் அன்யோன்னிியத்தை அறியாதது பூனை குட்டிகள் மட்டுமல்ல நம் பிள்ளைகளும் தான்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...