Thursday, March 2, 2023

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் by Veena Shankar

 


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்



தொட்டவுடன் பற்றி கொள்கிறாய் - நெருப்பு போல


மனைவியை விட அடக்கமாய் இருக்கிறாய் - நிலவு போல


பல உருமாற்றங்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாய் - நீர் போல


மெதுவாய் பொத்தானை அழுத்தினாலும் உயிர்த்து விடுகிறாய் - மந்திரவாதி போல


முகப்பில்லே நேரத்தையும் நாளையும் காட்டுகிறாய் - நாட்காட்டி போல


அவசரத்திற்கு கணக்கீடு செய்யவும் உதவுகிறாய் - வாய்ப்பாடு போல


எங்கிருந்தாலும் அந்த ஊரின் வெப்பநிலையையும் அறிய வைக்கிறாய் - தொலைக்காட்சி போல


ஆள் இல்லாத இடத்திற்கும் வரைபடம் காட்டுகிறாய் - அளவுகோல் போல


அங்கு சேர்ந்தடையும் நேரத்தையும் சொல்கிறாய் - கடிகாரம் போல


சில நேரங்களில் சீக்கிரமாகவும் செயல்படுகிறாய் - கணினி போல


சாமானியனிடமும் தஞ்சம் புகுகிறாய் - பழைய சோறு போல


தொலைவில் நான் இருந்தாலும் தொடர்பு படுத்துகிறாய் - அஞ்சல்காரர் போல


நான் உன்னை நிராகரித்தாலும் ஒட்டிக்கொள்கிறாய் - உறவு போல


தவறிய அழைப்பை ஏற்க நினைவுபடுத்துகிறாய் - நண்பனை போல


இது தான் உன் வெற்றியோ ?


இல்லை 


உன்னை உருவாக்கியவனின் வெற்றியோ ?


இல்லை 


உன்னை எங்களிடம் சேர்ப்பித்தவன் வெற்றியோ ?


இல்லை 


உன்னை இயக்க கற்றுக்கொண்ட மனிதனின் வெற்றியோ?


இல்லை 


காலத்தின் வெற்றியோ ?


இல்லை


காலனின் வெற்றியோ?


அறிய மனம் துடிக்கிறது. அதையும் நீயே சொல்லிவிடு, மேலும் ஐக்கியமாவேன் நான்

அதுவரை உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,

கொடுக்கிறேன், 

கொடுப்பேன்


இப்படிக்கு அலைபேசி என்னும் உன்னை என்றும் மறவா மனம்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...