Thursday, March 9, 2023

இன்றைய சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை


மன வலிக்கு வழியுண்டு வலிமை பெற, முகத்தின் புன்னகையால்


வாழ்வில் தொலைத்த பக்ககங்களை எண்ணுகிறான் தன் வாழ்நாள் முழுவதும்


ரகசியம் அவசியம் அதுவும் நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே சொல்லப்படவேண்டும்.


நம் எண்ணங்களின் பிரதிபலிப்பே நாம் சொல்லும் வார்த்தை.


அடுத்தவருக்கு நலம் விரும்பியாக மட்டும் இருந்தால் போதும் நம் மனம் விரும்பும் செயலை அவரிடம் செய்ய தூண்டாமல்


கோபம் மன விரிசலுக்கு ஆரம்பப் புள்ளி

ஆகும் விரைவில் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி


நாம் செல்லும் வழியில் வளியே வந்து வழிமறைத்தாலும் அதனால் விளையும் வலியையும் பொறுத்து சென்றால் வளியும் வீழ்வான் நம் வழியில்


இளமைக்கு மருந்து மனதை சுருக்காமல் வார்த்தையை அடுத்தவர் விரும்பும் படி விருந்தாக்குதல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...