Monday, June 12, 2023

விடை கொடுக்க முடியுமா? by Veena Shankar



 விடை கொடுக்க முடியுமா?


கடமை என்றிருக்கும் போது உடலுக்கு விடை கொடுக்க முடியுமா?


தனிமை என்றிருக்கும் போது தன்னலத்திற்கு விடை கொடுக்க முடியுமா?


உடமை என்றிருக்கும் போது பிரிவுக்கு விடை கொடுக்க முடியுமா ?

  

வறுமை என்றிருக்கும் போது ஏழ்மைக்கு விடை கொடுக்க முடியுமா?


மடமை என்றிருக்கும் போது அறிவின்மைக்கு விடை கொடுக்க முடியுமா?

        

ஆளுமை என்றிருக்கும் போது விமர்சனத்திற்கு விடை கொடுக்க முடியுமா?  


செழுமை என்றிருக்கும் போது அனுபவத்திற்கு விடை கொடுக்க முடியுமா?


உரிமை என்றிருக்கும் போது பாசத்திற்கு விடை கொடுக்க முடியுமா?


பசுமை என்றிருக்கும் போது விளைச்சலுக்கு விடை கொடுக்க முடியுமா?


பொறுமை என்றிருக்கும் போது பரிவிற்கு விடை கொடுக்க முடியுமா?


கருணை என்றிருக்கும் போது அன்பிற்கு விடை கொடுக்க முடியுமா?


சிறுமை என்றிருக்கும் போது சிக்கலுக்கு விடை கொடுக்க முடியுமா?


பெருமை என்றிருக்கும் போது மகிழ்ச்சிக்கு விடை கொடுக்க முடியுமா?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...