Sunday, June 18, 2023

அன்புள்ள அப்பாவே by Veena Shankar

 


அன்புள்ள அப்பாவே!


உங்களோடு கைகோர்த்து கொண்டு பழகிய நடையும்


வெளியூருக்கு செல்லும் வாய்ப்பில்லை என்றாலும் நிதமும் பாஜாருக்கு அழைத்து கொண்டு போன நாட்களும்


பள்ளியில் பயிலும் போது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அரை மணி நேரம் கூட்டி சொல்லி நீங்கள் என்னை எழுப்ப முயற்சி செய்ததும்


வெகு தொலைவில் நீங்கள் இருந்ததால் கல்லூரி காலத்தில் உங்கள் வரவை நான் எதிர்பார்த்து நின்றதும்


வேலைக்கு சென்ற போது என்னை அறியாமலே அவ்விடத்திற்கு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியதும் 


வெளியே செல்லும் போது இடது கை ஆட்காட்டி விரலில் வீட்டு சாவியை பொருத்தி கொள்வதும் எனக்கும் அப்பழக்கம் தொற்றி கொண்டதும்


கால் வலியை மறந்து பேரன் பேத்திகளோடு விளையாடிய நாட்களும்


உங்கள் உடல்நிலை பாதிக்கபட்ட போதும் அதை தாங்கும் வலிமை எனக்கு இல்லை என்று நினைத்தோ நள்ளிரவில் உங்கள் மறைவை, நான் என் பயணத்தின் போது அறிந்த வேளையும், என் துயரத்தை பகிர ஆள் இல்லாமலும் கதறி அழவும் முடியாமல் தவித்த தருணமும் 


உங்கள் மனதை போலவே அமைதியாய் நீங்கள் படுத்து கிடந்த அந்த நேரத்தையும் என்றும் மறக்க முடியாத நினைவோடு உங்கள் மகள்

2 comments:

  1. மனதில் நேரலையில் பார்க்க முடிந்தது உங்கள் அப்பாவை உங்களோடு ..உங்கள் உண்மையான உணர்ச்சிகள் சுமந்த வார்த்தை
    கோர்வையில்..

    ReplyDelete
  2. நன்றி கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...