Wednesday, June 14, 2023

வயதான குழந்தைகள் by Veena Shankar

 


வயதான குழந்தைகள்


சிறு குழந்தை போல்

சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லாமல் விடுவதும்

 

சொல்லகூடாத விசயத்தை மடை திறந்த வெள்ளம் போல் சொல்ல துடிப்பதும்


சொல்லிய பின் அதன் விளைவுகளை கண்டு வேதனை கொள்வதும்


தன் உபாதைகள் இதுவென என்று சொல்ல தெரியாமல் இருப்பதும்


உதவி என்று சொல்லி செய்யும் செயல்கள் உபத்திரமாக மாறி விடுகிறதே என்று வேதனை கொள்வதும்


தன் சக வயதினரை பேச்சின் மூலம் நட்பாகிக் கொள்வதும்


வயதுக்கு மீறியும் தன் பேரன் பேத்தியரை நண்பனாக்கிக் கொள்வதும்


பல விசயங்களை அவர்களிடம் மட்டுமே பகிர்வதும் 


அடுத்த தலைமுறையினரை நாம் கடிந்தால் நம்மை கடிந்து கொள்வதும்


விட்டு போஎன உறவுகளை தேடி புதுப்பித்துக் கொள்வதும்


நம் கட்டளைக்கு வாதம் செய்யாமல் பணிவதும்


நம் கோபத்திற்கு ஆளானாலும் அவர் காட்டும் மௌனமும்


போருக்கு செல்லும் வீரன் போல சில சமயங்களில் செயலால் எதிர்த்து நிற்பதும்


வயதுக்கு மீறிய பாசத்தை தேடுவதும் அது கிடைக்க வேண்டி தன்னை தானே முன்னிலை படுத்துவதும்


பொக்கை வாய் சிரிப்பும் 


தன்னுடைய சுறுசுறுப்பை மட்டுமே முதலீடாக கொடுப்பதும்


நாம் கேட்காமலேயே இருந்தாலும் நமக்கு ஆலோசனை கொடுப்பதும்


உண்ணும் உணவு ஒரு சாண் வயிற்றுக்கு என்றாலும் அவர்களின் பங்களிப்புக்கு அளவும் உண்டோ?

2 comments:

  1. எப்பொழுதுமே நாம் குழந்தையாக இருப்பது சிறப்பு - அருமை சகோ

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...