Friday, June 16, 2023

அந்தி நேரமா? by Veena Shankar



 அந்தி நேரமா? ஏன் 


மந்திகளும் அடைபடும் நேரமா?


சொந்தங்கள் வீடு வரும் நேரமா?


சந்தத்தோடு இசைக்கும் நேரமா?


சந்தியை எதிர்நோக்கும் நிலையா?  


சாந்தம் தேடும் மனமா?


உந்துதல் இல்லா வாழ்வா?

 

ஏந்துவது இல்லா மனிதமுமா?


தந்திரமாய் வைத்தேனே எனை  

 

சந்தித்த வேளையும் மறந்தாயோ?


சிந்திக்கும் திராணியும் இல்லையே என்னிடம்


நிந்திக்க முடியாது விதியையும்


நீந்தி கடக்கவும் வேண்டுமோ கயல் போல்?


பந்தியில் வந்து பாந்தமாய் அமரும்

 சொந்தங்கள் போல


வந்தனையே என் கனவில்


வெந்து தவிக்கும் என் மனதுக்கு எந்த 


மந்திரமும் தேவையில்லை துயில  


சந்திரனும் சொற்ப நேரத்தில் வந்திடுவானே?


ஐந்து கரத்தவனை தொழுது மன்றாடுவேனோ? 


தந்ததை தொந்தியில் அடைத்து கொள்ளாமல்

 நான் சொல்வதை கேட்பானோ அவனும்?

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...