Saturday, June 10, 2023

பூரி கோட்பாடு by Vidhya Nivash


 வலைதளத்தில் வைரலாகும் நடிகை

 சரண்யாவின் பேட்டி.அம்மாவும்,

அம்மாச்சியும் நேரில் வந்து பேசுவது

 போல் இருந்தது.அப்பா எத்தனை

 அழகான வாழ்க்கை நெறிமுறைகளை

 பின்பற்றுகிறார்.அகிலாவை

 நினைவுகூர்ந்தது poori theory

 எதற்கும் ஒரு உந்துதல்

 தேவைப்படுகிறது....மிக்க

 நன்றி.முதன் முதலில் அப்படி தான்

 பேசவே தயக்கம் நமக்கான

 வலைபின்னலில் இணைந்தவுடன்

 எத்தனை மாற்றம் ஒரு வட்டம் போல்

 தொடரும் ஒவ்வொருவரின்

 செயல்.எத்தனை பக்குவங்கள்

 அடைகிறோம். நம்மை பிறர்

 கண்காணிக்கும் போது எவ்வளவு

 பொறுப்பு அதை உணர்ந்தாலே

 போதும் குறிப்பாக பிள்ளைகள்.

கடைசியாக சொன்ன மூன்று

 விஷயங்கள் இந்த காலக்கட்டத்தில்

 ரொம்ப அவசியம் கைத்தொழில்,

 சேமிப்பு இவற்றுடன் தானாக வரும்

 மூன்றாவது தன்னம்பிக்கை.என்னை

 அறியாமலே மாறிய "me time"

 விண்மீன்களில் பதிவுகளை 

போடுவது, எழுதுவது இதை

 ஆதரிக்கும் அனைவருக்கும்

 நன்றி கண்டிப்பாக வீணாவின்

 பதிவுகள் எப்படி இப்படி என்று போய்

 ஒரு பழக்கமாக மாறிவிட்டது.

குறிப்பாக அத்திப்பூத்தாற் போல் வரும்

 வேதா அம்மாவின் சொற்கள்

 இன்னும்கூட உற்சாகத்தை தருகிறது.


2 comments:

  1. நன்றி வித்யா. என்னுடைய me time ல், தங்களுடைய me time ஐ களவாண்டு விடுகிறேனா? என்ற சந்தேகம் எனக்கு இன்னமும் இருக்கிறது. ஆனால் அது ஒரு கடமையாக மாற்றி விட்டீர்கள். நன்றிகள் பல

    ReplyDelete
  2. இல்லை.என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் ஆயுதம் உங்கள் எழுத்து.மகிழ்ச்சி🙏

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...