Sunday, June 18, 2023

தந்தை ஒரு வரமே by Vidhya Nivash

 


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

 ஆம் அதிகம் பேசாத அப்பாக்களின்

 ஒரு சொல் மந்திரமே. கேட்டு

 கொடுப்பவள் அம்மா கேட்காமல்

 உணர்வறிந்து கொடுப்பவர் அப்பா

எதை உழைப்பை மட்டும் அல்ல

 தங்கள் மகிழ்ச்சி,ஆசை,கனவுகள்,

உணர்வுகளை அடக்கி அனைத்தையும்

 பிள்ளைகளிடம் கொடுப்பவர்,

 பார்ப்பவர் அப்பா.இதில் மகள்

 தந்தையே அதிகம் பேசப்படுகிறது.

 அதுவே வெளிப்படை ஆனது.தந்தை

 தன்னையாகவே பார்க்கிறார்

 மகன்களை வெளிப்படையாக

 காட்டிக்கொள்ளாமல் உள்ளுற மகிழும்

 உறவு.மகன்களும் அது மாதிரியே

 இளமையில் எதிரி .ஒரு வயத்திற்கு

 மேல் தந்தையிடம் அன்பை

 வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும்

 மகன்கள். எங்கே அது அதிகாரமாக

 மாறிவிடுமோ என்று.தாயை எவ்வளவு

 வேணுமானாலும் விட்டுக்கொடுக்கும்

 பிள்ளைகள் தந்தையை ஒரு நூலிழை

 கூட பிறர் பேச இடம்

 கொடுக்கமாட்டார்கள் .தந்தை

 நொறுங்கி விடுவார் என்று அந்த

 கம்பீரத்தை கடைசிவரை காண

 விரும்பும் பிள்ளைகள்.

தந்தையின் காலணிகள் பலகதை

 சொல்லும் ஓடாய் தேயும் ,சபைக்கு

 வெளியே ,கஷ்டத்தில்க்கூடே,நம்மை

 தாங்கும் சுமைத்தாங்கி என பல...

அவர் சொல் மறப்போமா! அவர்

 ஆசை கேட்போமே!


தந்தை ஒரு வரமே !

அதிலும் தந்தைபோல் கணவன்

கிடைத்தால் அது பொக்கிஷமே!!

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...