தீடீரென இயற்பியலை கேட்டால்
என்ன செய்ய.. அட ஒன்னுமில்லைபா
இயற்பியல் எல்லாம் தூசு மாதிரி.
என்னை கண்டுபிடிங்க பார்ப்போம்.
நாம் உருவான கதை தெரியும்.
கருவறை இல்லாமல்
செயற்கையாகவும் இப்போது
உருவாக்க முடியும் என்றனர்.
ஆனாலும் இந்த படைப்பு
ஆச்சரியமான, அதிசமான ஒன்று.
இறப்பு -இறந்த பின்னாடி எங்கே
போவோம்.நம் வெற்றிடத்தை யார்
நிரப்ப? பல கதைகள் இருக்கு அது
அவரவர் புரிதல்.அது சரி இந்த
பிரபஞ்சம் மற்றும் அண்டத்தின்
பிறப்பு இறப்பு!
என் அருகில் வராதே என்று
எச்சரித்தேன். என்னை சுற்றி சுற்றி
வந்தாய் .என்னுடைய ஈர்ப்புவிசை
ரொம்ப ரொம்ப பெரிசு வெற்றிடத்தை
நிரப்புவேன் ,என்னுள் விழுந்தாய்
சிலையாவாய் ,நேரம் செல்லும்
பட்டென, உன் அடர்த்திக்கு தகுந்தார்
போல் வளைவேன். ஆனால் அசைக்க
முடியாது, என் ஆழம் அதை அறிந்தாக
எவருமில்லை..என்னுள் விழுந்து
பிழைத்தால் சொர்க்கம்.மொத்தத்தில்
பெண்ணும் நானும் ஒண்ணு பல
விஷயத்தில் என் உருவம்
அவர்அவர் கற்பனை கடைசியாக
புசுபுசுவென டோனட் மாதிரியாம் .
புரியாத புதிரை தேடுகின்றனர்.
ஆக்கம் ,அழிவு இதை தேட விடை
எங்கே..அவரவர் புரிதலே. தேடல்
அளவுக்கு அதிகமானல் என்னவாகும்
அது நம்மை இழுக்கும் மாய
சக்தி.அதை சீண்டினால்??
அட கேட்டீங்களா பூமிக்கூட ஒரு
பக்கமாக சாயுதாமே.அத விடுங்க
இன்னைக்கு என்ன நாள்??
வானொலியில் பாட்டு அடி தூள்.

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDeleteகேட்டவுடனே டக்குனு எழுதிட்டீங்க உங்க அறிவு அட்சய பாத்திரமா இல்ல அலாவுதீன் விளக்கா நேயர் விருப்பத்திற்கு நன்றி சூப்பர் வித்யா
ReplyDeleteஉங்களுக்கு தான் நன்றி சொல்லனும் கருந்துளை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் வரலாறு இப்போது தான் அறிந்தேன்🙏
Deleteஎன்னவளின் கருவிழியும் கருந்துளையே அதில் விழுந்த நான் இன்னும் வெளிவர முடியாமல் கடவுள் துகளுக்கு முன்னானேன்
ReplyDeleteஅருமை. இதை எதிர்ப்பார்த்தேன் கருந்துளைப் பற்றி கேட்கும் போது அது பல இடத்தில் ஒத்து வந்தது.
ReplyDeleteஉண்மையாக நானும் அதைத்தான் சகோதரர் சொன்னவுடன் நினைத்தேன். ஆனால் இந்த படைப்பு அதற்குரியது என்பதை ஊகிக்க முடியவில்லை. கருவிழி என்பதும் விடையாய் இருக்குமோ என்ற சந்தேகம் தான்
ReplyDelete