Friday, June 23, 2023

மறையும் மறந்த உணவை சொல்லுங்க by Vidhya Nivash

 


பார்க்க எப்படி இருக்கு முட்டை மாதிரி

 தானே.ஆனால் இது மாம்பழ குழம்பு

 இந்த சீசனுக்கு ஏற்றது.சின்ன சின்ன

 நாட்டு மாம்பழத்தில் வைத்தால்

 அருமையாக இருக்கும்.அந்த

 மாங்கொட்டையை சப்பி சாப்பிடும்

 போது ஒரு எண்ணம்.அதை விட

 மனசே இல்லை இனிப்பு,புளிப்பு

 மற்றும் காரம் அமிர்தம்.ஏன் இந்த

 தலைமுறையினர் இந்த மாதிரி

 சாப்பிடுவதில்லை ,முருங்கைகாயும்

 அப்படி தான் பல்லில் படாமலே

 சாப்பிட்டு பழகிவிட்டனர்.எந்த

 குழந்தையும் மாங்கொட்டை சாப்பிட்டு

 பார்த்ததில்லை.மா வத்தலும் அப்படி

 தான் மறைந்து வருகிறது.பழைய

 உணவுகள் காணாமல் போகிறது.

 உங்கள் ஊர் உணவு என்ன மறைந்து

 வருகிறது.யார் வீட்டில் இது போல்

 ரசித்து உண்ணுக்கிறார்கள்

 மாங்கொட்டையை சொல்லுங்க??

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...