Friday, January 12, 2024

இந்த வார படமும் கருத்தும் by Akhiladevi Kumaran

 


காலை வணக்கம்❤️


அட… இதென்ன என் மனம் நிரம்பி வழிகிறதே! 

துளையிடாதவரை என் பலம், என் நிறை, என் குறை தெரியவில்லை..☺️


என்னில் நிறைந்த ஆற்றல்,

என்னில் நிறைந்த ஆர்வம்,

என்னில் நிறைந்த ஆணவம்,

என்னில் நிறைந்த ஆரவாரம்…


என்னில் நிறைந்த கர்வம்,

என்னில் நிறைந்த கருணை,

என்னில் நிறைந்த கனிவு,

என்னில் நிறைந்த கருத்து…


என்னில் நிறைந்த திறமை,

என்னில் நிறைந்த திகைப்பு,

என்னில் நிறைந்த திமிர்,

என்னில் நிறைந்த திணிப்பு…


அனைத்தும் வழிந்து ஓட,

லேசா.. லேசா..மனம் ஆட,

சுற்றி அனைத்தும் பாட,

வெற்றிடமாக மனம் மாற,


அடடா இதுவே ஆனந்தம்!!!

காலி செய்து காத்திருக்கிறேன்-

காலம் இன்றளிக்கவிருக்கும் பரிசுகளுக்கு🥰

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...