Monday, January 29, 2024

இலையில் கலை by Veena Shankar

 


காலையில் எழுந்தவுடன் இந்த கலை


மாலை வரை என்னில் மலை போல் இருக்க


வாலை சுருட்டிக் கொண்டு இவ்வலையில் சிக்க


சீலை பிடித்து செல்லும் நான் 

சிலையென நிற்க


தோலை காத்தபடி நான் தொலைவில் இருந்தபடி பார்க்க


கடவுளும் தோன்றினார் கண் முன்னே இலையின் கலையில்


 கலைக்கு இலை பொருட்டல்ல

அதில் உருவாக்கும்

வடிவமே சாட்சி


 கலையில் இத்தனை கோணங்களா?


வட்டம், அரைவட்டம்,

அதன் விட்டம், ஆரம்

அது கொண்ட

கோணம், கணம்

திரட்டி உருட்டிய

உருளை, கூம்பு

என பலவும்


 இணைந்த கோடுகள்

மற்றும் வளைவுகள்


நெகிழவும் செய்ததே 

என் உள்ளத்தை

கண்டபோது

அதன் கலை நுணுக்கம்

அறிந்த போது 


பெற்ற வடிவமும்

அவை ஒவ்வொன்றும்

தாங்கி நிற்கும் 

நேர்த்தியும்


கலைஞனின் கைவண்ணமும்

அவனை உருவாக்கியவனும்


அவனால் உருப்பெற்ற யாவும் 

இவனாலே!


வண்ணமே தேவையில்லை, 

காணும் பொருள்

பரம்பொருள் என்பதால்


சான்றிதழும் அவசியப்படவில்லை

உருப்பெற்றது

தோற்றுவித்தவனின் 

சிஷ்யன் என்பதால்

2 comments:

  1. Wow ..படைத்தவனையே படைத்திட்ட பெருமை பெருமிதம் ..👌👌👌 கலை வணங்கும் ..தலைக்கனம் நீக்கும் 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உண்மை கிருத்திகா

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...