Thursday, January 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


காணும் விழியில் பக்குவம்


அவள் விழி நோக்கும் பார்வையில் கண்ணீர்


அவள் முகம் கொள்ளும் வண்ணத்தில் குருதி

ஏன்?


எதிரிகளை அழிக்கும் காளியாய் உருவெடுத்தாளோ?


அன்புக்கு கதை இயம்பும் தாயாய் வென்றாளோ?


திலகமிட்டவனுக்கு பாங்குடன் தாரமாய் இருந்தாளோ?


பொறுமையில் சிறகுள்ள பெண்ணாய் சாதித்தாளோ?


ஆண்களை வெல்ல வேங்கையாய் புறப்பட்டாளோ?


ஏற்ற வேடத்திற்கு பக்குவமாய் காட்சிக்காக மாறினாளோ?


சிரத்தில் குருதி பெறுக


முகத்தில் வனப்பு கொடுக்க


பார்வையில் எதிரியை தாக்க


விழியில் கண்ணீர் மல்க 


மனதில் ஆணவம் கொள்ள 


இன்றிலிருந்து பெண்ணாய் உருவெடுத்தாள் சாதனையில்லா தன் வாழ்வில் செயலால் ஏற்றம் கொள்ள

 வெட்கத்தால் தோன்றிய செந்நிறம் அல்ல இது

மானம் காக்க ஏந்திய கத்தியால் விளைந்த செந்நிறம் இது

உதிர்ந்தது உடல் மட்டுமல்ல அவள் இளகிய மனதும் தான்

தன் துணையின் பிரிவு ஒரு பக்கம் இருக்க

அவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையில் கலையப்பட்ட சந்தோஷத்தில் கலைந்தது அவள் உருவம்

2 comments:

  1. Wow.. virtually could see her வலிகள் plus வலிமை.. மிக அருமை வீணா ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...