Thursday, January 18, 2024

இறையும் இறையுணர்வும் by Vidhya Nivash

 


இறையும் இறையுணர்வும் வாழையிலை நிறைய படையல் நெய் சொட்ட .அதில் வேற அவர் அவர் விருப்பத்திற்கேற்ப மாறும் படையல் அடுத்தடுத்த தலைமுறைக்கு..

பலி கொடுத்து வேண்டினால் நினைத்தது கிடைக்கும்.

எந்த கடவுள் நேரில் வந்து இதை கேட்டது.இதை கொடுத்தால் அதை கொடுப்பேன் என்று.எனை மகிழ்விக்க உனை மகிழ்விப்பேன் என்று.

எதை வேண்டி ..கண் முன் நிற்கும் உயிரைவிட கண்ணுக்கு தெரியாத உயிருக்கு எதை கொடுத்து நிறைப்பாய். 

உயிரை படைத்த கடவுளே அந்த உயிரை பலி கேட்குமா?

எதோ அந்தந்த காலத்தில்,பருவத்தில் கிடைத்ததை படைத்து அகமகிழ்ந்த முன்னோர். இன்றும் சிந்திக்காமல் அதையே செய்வதில் என்ன அறம்.

படித்ததில் பிடித்தது,

எண்ணங்கள் மற்றும் தூய மனதால் மட்டுமே இறையையும், இறையுணர்வையும் அடைய முடியும்.

மற்ற அனைத்துமே சிந்திக்க வேண்டியது. 




2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...