Tuesday, January 30, 2024

கண்ணம்மா ஜோதி by Vidhya Nivash

 


பறை பறை உலகெங்கும் உரக்க பறை எவ்வுயிரும் எந்த விதத்திலும் ஊனம் இல்லை .அதன் கூட்டை உடைத்து பறக்க, உலகை வலம் வர. தைரியம், முயற்சி என்ற ஆயுதம் போதும் என்று உலகிற்கு பறைசாற்றும் இந்த தேவதையின் அற்புதமான திறமைகளை கண்டு மெய்சிலிர்க்க கண் கலங்காதவரே இல்லை நேற்றைய அரங்கிலே. 

இவளின் மறு உருவாக அன்னை என்னும் தெய்வம் எடுத்த முயற்சியை காணும் போது நம் வலிகள் வெறும் தூசே.எதுவும் இல்லாமல் ஒருவரால் சாதிக்க முடியும் போது பல ஆசிர்வாதத்தை பெற்ற நாம் சிந்திக்கும் வேளை இது.எது நம்மை தடுக்கிறது.

இவர்கள் கேட்பது இரக்கம் இல்லை அங்கீகாரம்.எங்கே புறக்கணிக்க பட்டோமோ அங்கே தன் திறமைகளை அதுவும் பல்திறமைகளை பறைசாற்ற  துடிக்கும்,அயராது உழைக்கும் தேனீக்கள். 

அதே அரங்கில் அபிஷேக்கின் பாடலை கேட்டவுடனே.அனைவரின் கண்களும் கலங்கின.அந்த தாய் மகனின் உறவை,அவரின் முயற்சியை பார்க்கும் போது சொல்லாமல் சொன்ன பாடங்கள் பல.

இந்த குழந்தைகளின் உலகமே அவர்களுடைய பெற்றோர்களே.  இவர்களை பார்க்கும் போது அவர்கள் கேட்கும் அந்த அங்கீகாரத்தை முடிந்த வரை ,ஒரு கைகுலுக்கள் இல்லை ஒரு புன்னகையை நம்பிக்கையாக கொடுக்கலாமே.அடுத்த தலைமுறைக்கும் பழக்கலாமே.

ஜோதி கண்ணமாவின் பறை கண்மூடிகிடந்த மனதின் அறையை திறந்தது.




1 comment:

  1. படிக்கும் போதே வலிகளை உணரமுடிகிறது. பெற்றோர் எனும் தெய்வம் அருகிலிருக்க, நம்பிக்கை என்ற ஊன்றுகோலோடு வலம் வருவர் இச்சாதனையாளர்கள்.. அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...