Wednesday, January 4, 2023

பால்வெளி மண்டலம் by Vidhya Nivash

 


பால்வெளி மண்டலத்தை நேரில் கண்டால்

எப்படி இருக்கும்..பரவசம்.

தினமும் அதிசயங்கள் அரங்கேறும் பால்வெளி மண்டலம் ஒளி மாசுவால் மறைந்தே போனது..

இத்தனை நாளும் வீணாகி போனது ஏன்?என்ற கேள்வி எழ..

வெட்டவெளியில் வேப்ப மரக்காற்றில் பாய் விரித்துப்படுத்து வானத்தை பார்த்து நிலவையும், நட்சத்திர கூட்டத்தையும் துணைக்கு சேர்த்து சொன்ன கதைகள் எங்கே போனது...

சலனமற்ற ஓடையில் நீர் ஓடுவதை போல அந்த அதிசயத்தை காண ...கண்களில் விளக்கெண்ணைய் விட்டார் போல் பால்வெளியை பார்த்து கொண்டிருந்தோம்..

அன்று செக்கச்சிவந்த நிலாவை பார்க்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்க..

கலைந்த கூந்தல் போல நிலவிலிருந்து பால்வெளி பாதை ஓட அதில் அள்ளி தெளித்தார் போன்ற நட்சத்திரங்கள் ஜோலிக்க கண்களில் படமெடுக்க மனத்தில் பதித்தோம்..

கண்ணிமைக்கும் நொடியில் வந்து போனது எரிநட்சத்திரம்..எத்தனை அழகு.

வானில் சங்குசக்கரம் போல் வந்து போன வால் நட்சத்திரம்..

 சாலையில் கடக்கும் வாகனங்கள் போல் வானில் நடக்கும் அதிசயங்கள்..

காதில் மட்டுமே கேட்டதை கண்ணில் கண்டதும் அதிசயித்து போனேன்..அந்த இடத்தை விட்டு வர இயலவில்லை..

அந்த கணத்திருந்து அதை பற்றிய ஆராய்ச்சிகள் ...இரவில் கண்கள் தானாக வானத்தில் எதையோ தேடும்...

தொடரும்...






No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...