Friday, January 6, 2023

படத்தைப் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Vidhya Nivash

 

ஆடை கூட பாரம் என்று வேலை செய்தனர் முன்னோர்...

அரை மையில் தூரத்தைக்கூட நடக்க முடியவில்லை கால்களில் பலமில்லை..

டேபிள் டாப் கிரைண்டர் கல்லைக்கூட தூக்க கையில் வலுவில்லை..

தற்சார்பு வாழ்க்கைக்கு போய் உடலும் மனமும் வலுப்பெற உழுவும் நாள் தூரமில்லை..இழந்த ஆரோக்கியத்தை மீட்க வீட்டு தோட்டத்தை விட வேற வழியில்லை..

நாம் செல்லும் வட்டப்பாதையில் மீண்டும் தொடுவோம் விட்டதை..


வெயிலை ஆடையாக அணிந்தோம் அன்று 

வெயிலே ஆகாது  இன்று..



மறந்து போன, மறைந்தே போன நெற்குதிர்..

நெற்குதிர்கென்றே அறையும் பலரின் வயல்வெளிகளும் மறைந்து போன கதை..

விவரம் தெரிந்த வயத்தில் வீட்டிலேயே ஆள் வைத்து அறுவடையாகி வந்த நெல் பெரிய வண்டில் வந்து இறங்க ...வீட்டில் நெல் வருகிறது என்று ஓரே பரப்பரப்பு..வரும் குத்தகைதாரருக்கு சாப்பாடு ஒரு புறம்..நெற்குதிர் நிரம்ப..நெல்லை அவித்து பச்சரிசியாக சாப்பிட்டோம்..குருனை அரிசியும் சுவையாக இருக்கும்.

நாள் செல்ல அரவை மில்லிற்கு சென்று பச்சரிசியாக மாண்டு வண்டில் வந்து இறங்கும்..

இன்னும் சில வருடங்கள் பிறகு விளைச்சல் குறைய பச்சரிசி புழுங்கல் அரிசியாக மாறியது...

சில வருடங்கள் பிறகு சைக்கிள்ள வந்தது..

விளைச்சல் இல்லை..

பிறகு வயலை குத்தகைதாரரே கேட்க பல வருடங்களாக இழுபறி ..

கடைசியாக கை மாற..வயல் இருக்கிறதா??

இல்லை கட்டிடமாக???





No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...