Thursday, January 12, 2023

சிதறிய எண்ணங்களை குவிக்கும் "கோப்பை" இந்த வாரப் படம் by Veena Shankar

 


 இரண்டும் மனப்பூர்வமாக அனுபவித்தாலும் சமயத்தில் ஆபத்தானது, எல்லை மீறும் போது

 மதுவும் மங்கையும் மயக்கினாலும் மனதுக்கு தற்காலிக சுகமேயன்றி வேறில்லை

ஒரு கோப்பையிலே இரு மங்கையர், விடை உன்னிடமே

 மனம் மயங்கியதோ தினம் மயங்கினேனோ, விடையில்லை என்னிடம்

நன்றி சொன்னேன் அறிமுகப்படுத்தியவனுக்கு , என்னை நான் மறக்க, வியக்க உதவியனுக்கு

கோப்பையின் மது மயக்கியதோ மங்கையின் அழகு மயக்கியதோ

இரண்டிலும் என் மனது மயங்கியது தான் உண்மை

 என்னதான் போதையிலும் பேதையிலும் மயங்கினாலும் திசை மாறா பறவை போல வீடு போய் சேர்வது புரியாத புதிர்

குடித்தவனுக்கு மனம் மங்கியதோ? தெரியாது வரைந்த படத்தை பார்த்ததும் பாராட்ட தோன்றியது ஓவியனின் கைவண்ணத்தை

முழு வட்ட வாழ்க்கையில் அரை வட்ட பானம் உள்ளே சென்றால் வெற்றி என்பது விட்டத்தை நோக்கி எட்டா கனியாகிவிடும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...