Friday, January 13, 2023

பழையன கழிதல் by Vidhya Nivash

 பழையன கழிதலும் புதியன புகுதலும்..



தீப்பிரகாசமாக எரிய காய்ந்த நல்ல மரக்கட்டைகள் வேண்டும் புது கட்டை உதவாது..


அது மட்டும் போதுமா இல்லை..


தீ மூட்டுவது சுலபம் அன்று முதலில் பொறுமை வேண்டும்.


மரக்கட்டையில் தீப்பிடிக்க சரியான அனலும்,சூழ்நிலையும் ,தூண்டியும் வேண்டும் இல்லையேல் நெடுந்நேரம் எரியாது ஆரம்பித்த இடத்திலேயே அணைந்து விடும்..ஒரு முறை பற்றி கொண்டால் கடைசி துளி சாம்பலாகி காற்றில் கரையும் வரை துடிக்கும் இருளை விலக்கி பிரகாசிக்க...


நெருப்பை போல் பிரகாசிக்க ஆரோக்கியமான உடல்,மனம்,குடும்பம்,நண்பர்கள் நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு துரும்பும் அவசியம். 


 இதில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை.  


அனைவரின் விருப்பும் வெறுப்பும் நம்முடையது போல் எண்ணி செயல்பட்டாலே அனைத்தும் இனிதே...


நெருப்பை போல் ஒளி வீசி பழைய துயரை மறந்து பிறரை மகிழ்வித்து மகிழ இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏🙏



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...