வேண்டுவன
இல்லை என்று சொல்லா நிலை வேண்டும்
எல்லை மீறா துணிவு வேண்டும்
வில்லை வளைக்காத வீரம் வேண்டும்
தொல்லை தாரா வசந்தம் வேண்டும்
சொல்லை மாற்றா மனம்வேண்டும்
கள்ளை நோக்கா திடம் வேண்டும்
கிள்ளை மொழி மாறா சொல் வேண்டும்
பிள்ளை குணம் குறையா வாழ்வு வேண்டும்
கொள்ளை போகா செல்வம் வேண்டும்
கள்ளம் கொள்ளா தருணம் வேண்டும்
பள்ளம் இல்லா பயணம் வேண்டும்
உள்ளம் கோணா முதுமை வேண்டும்

No comments:
Post a Comment