Thursday, January 26, 2023

அலங்கார மீன்கள் by Vidhya Nivash

 


வண்ண வண்ண மீன்கள்

துள்ளி துள்ளி வட்டமிடும் மீன்கள்

எல்லையில்லா நீரில் சுந்தரமாக சுற்றித்திரிந்த மீன்கள்

சுறா மீன்களை கண்டு துள்ளி ஓடும் மீன்கள்

இங்கு பல ஊரின் மீன்கள் ஒன்றாய் 

ஓரே கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்ட மீன்கள்

நானே சென்று இடித்தாலும் துரத்தி வந்து கடிக்கா சுறா மீன்கள்

பார்ப்போர் கண்களுக்கு விருந்து நாங்கள் ஆனால் பல முறை சென்று கண்ணாடியில் இடித்துக் கொள்ளும் அப்பாவி மீன்கள்

பல நாட்டில் வசிப்போர் கைப்பேசியில் பிடிக்க பல ஊர்கள் சென்ற மீன்கள்

உண்மையில் ஒரே இடித்தில் அடைக்கப்பட்டு விடுதலைக்கு ஏங்கும் மீன்கள்

வண்ண வண்ண விளக்குகள் எங்களை அலங்கரிக்க,ஒரு பக்கம் செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன் வர,பலரின் பளிச்சிடும் சிரிப்புகளின் நடுவே  மூச்சை அடக்கி,முனகலை அடக்கி ஈ என்று காட்சி தரும் மீன்கள்..

எங்களுக்கும் ஒரு நாள் விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கும் அலங்கார மீன்கள்



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...