Wednesday, January 18, 2023

பறவையும் சிந்தனைகளும் by Veena Shankar

 


கடற் பயணத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் உங்களோடு என்றன காகைக் கூட்டங்கள்


கடல் எது? வானம் எது? தெரியாமல் விழித்து பறந்தன காகைகள்


நீர்பரப்பிலிருந்த பறவைகள் மேலேழுந்து சென்றன அறியாமையில் தங்களை விரட்ட யாரோ வருகிறார்கள் என்று நினைத்தும் படகின் துடுப்பு என்று தெரியாமலும்


செவ்வானம் வசப்பட்ட மகிழ்ச்சியில் காகைகளும் தங்களை பருந்தென நினைத்தன.


யாருக்கும் தெரியாமல் ஓடி போக நினைத்த காதலர்களுக்கு வழிகாட்டியாய் இந்த பறவைக் கூட்டங்கள்


யாருக்கும் தெரியாமல் ஓடி போக நினைத்த காதலர்களை வளைத்து ஊராரிடம் மாட்டிவிட எத்தனிக்கும் பறவைகள்


வானம் தரையில் வசப்பட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை அழகாக அனுபவிக்கவும் தங்களை முன்னேற்றி வளம் தேடும், புதுமையை நாடி அடைய துடிக்கும் காதலர்கள்


பூங்காவனம் தேவையில்லை

மங்காத ஒளி போதும்

எங்களை வாழ்விக்க

வங்கக்கடலில் பயணித்து

நீங்கா புகழ் கொள்ள

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஆசி வேண்டும்


பறக்கும் ஜோடிகளில் சிறந்த ஜோடிகள்  எவை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...