Wednesday, January 25, 2023

இணைந்த கைகள் by Veena Shankar

 


குழந்தையால் அந்தஸ்து கிடைத்த பெற்றோரும்

பெற்றோரால் அங்கீகாரம் பெற்ற பிள்ளையும் நன்றி சொல்லும் காட்சி


பாசத்தையும் அன்பையும் தேடும் கரங்கள் எவர் எவரிடம் என்பது காலத்தின் விளையாட்டு


இணைவதில் உள்ள சுகம் பிரிவதில் இல்லை

சேர்வதில் உள்ள பிணைப்பு அகலுவதில் இல்லை

அரவணைப்பில் உள்ள பாசம் ஆளுவதில் இல்லை


போராட்ட வாழ்கையில் போர் வீரனாக நானும் உண்டு - குழந்தை


திருமணத்தில் இணைந்த கைகள் நீதிமன்றத்தில் பிரிய மனமில்லாத மழலை


வறுமை இல்லை பாசத்திற்கு, போராடு உயிருள்ள வரை


தாய், தந்தையின் மனங்களோடும் கரங்களோடும் இணையும் ஓர் உயிர் அடுத்த தலைமுறையை விரிவாக்கம் செய்ய வேண்டி


மாசற்ற அன்னையின் கரங்களை கைப்பற்றும் சிசு பின்னாளில் உதறுவது ஏன் என்று காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் கரங்களே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...