Friday, January 20, 2023

நாணமும் நத்தையும் by Vidhya Nivash

 



எத்தகைய அழகான படைப்பு

கைமுறுக்கு போல் சின்ன அறையை முதுக்கில் சுமக்க

சமயத்தில் உள்ளே சுருள யார் கற்றுத்தர நீ சுமந்து செல்கிறாய் நித்தம்

மலர் மொட்டியிருந்து அரும்பு வெடிக்க எட்டிப்பார்ப்பது போல்

ஓட்டிலிருந்து உன் தலையை எட்டிப்பார்க்க

நாணத்தில் தலைவி தலைவனை எட்டிப்பார்த்தது போல் சொக்கினோம் உன் அழகில் 

பல நேரம் கல், மண்,மரமுடன் உன்னுடைய ஓடும் ஒன்றாக ஒட்டிக்கொள்ள என்ன மாயம் செய்து கண்ணிலிருந்து மறைவாயோ.. 

நத்தை ஊர்ந்து வருவது போல்

மங்கை ஊர்ந்து வர

இனிப்புக்கு ஊரும் எறும்பு போல் 

இளவட்டங்கள் ஊர்ந்து வர

பின்னே ஊர்ந்து வந்தது ரயில் வண்டி




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...