Tuesday, January 24, 2023

முடக்கம் ஏன் by Vidhya Nivash

 


வேகமாக வா சூரிய கதிர்கள் நம்மை விழுங்க வருகிறது..

பனியில் ஊரிய சுவரில் ஒட்டிக்கொண்டு உல்லாசமாக கதகதப்பில்  வலவல உடலை சுருண்டு நீட்டி கிடக்க சூரிய கதிர்கள் வருவது தெரியாமல் பேச்சே!

கூட்டமாக கூட்டமாக குழுமியிருந்த நம்மை சில நேர பிரிவு நெருடலான பாதையை கடக்கும் போதும் உணரோம் அல்ல..

பார்ப்போர் கண்கள் பறிக்க வெல்வெட்  ஆடை உடுத்திய உடல் குளிருக்கே பழக சிறு சூடு தாங்க முடியவில்லை ..தப்பி தவறி நகரத்திற்கு செல்லாதே இங்கு சூரியனே மேல் அங்கு தீக்கு இரையாவோம். 

இதோ வந்தது இடுக்கு போ உள்ளே...

அட பழக பழக பழகிபோகும் ஏன் இந்த முடக்கம் நினைத்தன முடியும் வரை போராடுவோம் வா நண்பா!!

ரயில் வண்டி போல் மலை ஏறி இறங்குவோம் வா..

சாகசமே சுவாரஸ்யமானது முடங்கி போய் தேங்காமல் வெளி உலகம் கண்டு வித்தைகள் கற்போம் வா....


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...