Monday, January 23, 2023

கார் மேகங்கள் by Vidhya Nivash

 


மழையை கொட்டி தீர்க்க காத்திருக்கும் கார் மேகங்கள்

வா தோழியே உன்னில் குளித்து விளையாடி துளிர் விட புன்னகையால் வரவேற்கும் பூக்கள்

மேக கூட்டங்களுக்கும் மரக்கூட்டங்களுக்கும் இடையே கம்பி வேலியாக மின் கம்பிகளை பிடித்து நிற்கும் மின் கம்பங்கள்..அடிக்கும் மழையில் வீழ்வோமோ என்ற அச்சத்தில்..

உன்னில் நான் என்னில் நீ என்று மண்வாசனையும் டீக்கடை பஜ்ஜி வாசனையும் மூக்கை துளைக்க கூடவே தேநீரும் சமோசாவும் ஆளை இழுக்க ..இரு விழி உன்னை காண காத்திருக்க..

குளிரால் உடல் வாட்ட 

பறவைகள் கூட்டில் அடைய

மயில் ஆட,குயில் கூவ 

மடை திறந்த வெள்ளமாக மழையை கொட்டித்தீர்த்தது கார்மேகங்கள்..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...