Monday, January 30, 2023

ஒன்றல்ல இரண்டு by Veena Shankar



கோப்பையில் பாதி மது உள்ளே சென்றதும் மதி மாறி நிறுத்தி கொண்ட மாது


போதையால் பாதை மாறிப் போகும் பேதை


வண்ண திட்டுக்கள் ஓவியத்தில் மட்டுமல்ல அவள் மனதிலும் ஆட்கொண்டது, அதை தேனாக மாற்றும் முயற்சியில் அவளும் அவள் நடவடிக்கையும்


தன்னை ஏமாற்றிவிட்டவரை காணாது தவிக்கும், முகம் காட்ட மறுக்கும் இந்த பெண் அடுத்த பெண்ணின் வருகைக்கு காத்திருந்தாலும் அவன் முகத்திரை விலக்கவும் காத்திருக்கிறாள் காலம் கணியும் வரை


பழரசம் என்று ஏமாற்றி மதுபானம் குடிக்க கொடுத்தாரோ

நாகரீகம் என்று சொல்லி பகட்டான உடை கொடுத்தாரோ

தவறில்லை என்று கருதி தடம் மாற சொன்னாரோ

யூகித்து கலங்கியது என் உள்ளம் பெண்ணின் பாதையை மாற்றியது யாரோ


கையில் தண்ணீர்

விழியில் கண்ணீர்

ஓவியத்தில் ஒன்று கண்டும் மற்றொன்று காணாமலும்


அழகு, காண்பதில் மட்டுமல்ல. தண்ணீரில் பிரதிபலிக்கும் ஓவியத்தின் கையிலும் தண்ணீர்


மினிகதை


கருங்கூந்தலை அள்ளி முடிந்து, மதுபான கோப்பையை கையில் ஏந்தி, குட்டை பாவாடையும் அரைக்கை சட்டையுமாய் தன் காதலன் கிழவனுக்கு காத்திருக்கும் கிழவி. இது தெரியாத கிழவன் , கிழவியை யுவதி என்று நினைத்து அருகில் வர , தான் இது ஏற்கனவே கண்ட முகமோ என பார்த்து கிழவன் விழிக்க, அவளை மெதுவாக தீண்ட தன் கிழவனின் முதல் ஸ்பரிசம் போல் உணர்ந்தாள் அரிதாரம் பூசி மிடுக்கேறிய கிழவி

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...