Saturday, January 21, 2023

மாலை மயக்கம் by Vidhya Nivash

 

எத்தனை அழகு மெய்மறந்து போனேன். இதற்குப் பெயர் தான் மயக்கம் செய்வதோ!இயற்கையை அன்னை வரைந்த வண்ண ஓவியத்தை கண்டு மெய்மறந்து போனேன்... பிசிர் தட்டாமல் வரைந்த ஓவியத்தை பார்த்து மெய் சிலிர்த்தது .

 அப்படியே அள்ளி எடுத்து சேலையாக கட்டிக் கொள்ளவா??போர்வையாக போர்த்திக்கொண்டு முகர்ந்து பார்க்க வா???

 ஜில்லென்ற காற்றை மறந்து போனேன்!
 சுற்றி இருக்கும் அத்தனையும் நின்று போனது போல் இருந்தது..
 உன்னை பார்த்த மாத்திரத்தில் என்னை இழந்தேன் உன் வசம்... 
 எத்தனை அழகு அதிலே மணல்மேடுகள் அழகு சேர்க்க....
 போட்டிக்குப் பக்கத்திலே இருந்த மனிதனின் கைவண்ணத்தையும் மறந்து போனேன்... சூரியன் மறைய மறைய நீல வானம் செவ்வானமாக மாறி கடைசியில் இருளை தழுவும் போதே...
 மனிதனின் கைவண்ணத்தில் செய்த மின் விளக்குகள் மின்ன உன்னை மறைத்துக் கொண்டாய் இருளில்....
 மீண்டும் வருவாய் நீ மறுநாள்!
 எனக்கு எப்பொழுது காட்சி தருவாய் என்று காத்திருக்கிறேன்....
 எனக்கு எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் உன்னை காணும் காட்சி என்று காத்திருக்கிறேன்...

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...