Saturday, January 14, 2023

நினைவுகளும் பொங்கலும் by Vidhya Nivash



 பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது .... கிடைக்கும் வார விடுமுறையில் பழைய அண்டா,குண்டா,கதவு,ஜன்னல் தூசியை துடை.... தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளும்,இன்றும் மனதில் ஓடும் மறக்க முடியாத விளம்பரங்களும்,நான்கு நாள் விடுமுறை கடைசியாக காலையில் செய்த பொங்கல் மூன்று வேளையும் சாப்பிட்டு சில சமயம் மறுநாளும் அப்பா ... இது நகர்ப்புற பொங்கல் பல வருடங்கள் முன்... 


இப்போது வாரம் ஒரு முறை பொங்கல் ஹோட்டலில் கிடைப்பது போல் (பிடிக்காதவருக்கு தோசை)..எப்போதும் வழுக்கி விழுவதை போல் தரை,வீடு..


கிராமப்புற பொங்கல் இன்னும் வீடு வெள்ளை அடிப்பது முதல் பல பல...


சென்னையில் காணும் பொங்கலும் மெரீனாவும்...


சந்தையில் வண்ணம் தீட்டிய சட்டி வாங்கி

புதிதாக கதிரறுத்த நெல்லை வைத்து உப்பில்லா பச்சரிசி பொங்கி

தோட்டத்தில் விளைந்த பூசணி,பறங்கி,வாழை,மெச்சை வைத்து கறி சமைத்து..

வீட்டு பிள்ளை காளைக்குக்கு வர்ணம் தீட்டி...

காலம் தவறாமல் பெய்த மழையையும் ,கதிரவனையும் வணங்கி..வயிறார உணவளித்த உழவனை வணங்கி.... 

தித்திக்கும் கரும்பைப்போல் குடும்பத்துடன் இனிதாக கொண்டாட 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🙏 







No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...