Saturday, January 28, 2023

நிஜமற்ற மனிதன் by Veena Shankar

 


ஒருவரின் முன்னேற்றம் அடுத்தவருக்கு இழப்பு


ஒருவரை நசுக்கி முன்னேறும் கால்கள், பின்னாளில் தனக்கும் இந்நிலை என்பதறியாது.


முதலாளிகளை தாங்கி நிற்கும் தொழிலாளிகள்


ஏற்றி விட்ட ஏணியை மறக்கும் கால்களும் அதனை உயிரைக் கொடுத்து காத்து மன்னிக்கும் நெஞ்சங்களும்


கொடுத்து வைத்தவர்கள் கெடுத்த அடுத்தவரின் வாழ்க்கை


உயிரின் விலையறியா வித்தகர்கள் காலடியில் உயிரை விடும் உத்தமர்கள்


வெறுங்காலுடன் வா உன்னை பதம் பார்க்கிறோம் என்றன கட்டெறும்புகள்


படத்தில் உள்ள எறும்புகளை நிஜம் என்று நினைத்து நசுக்க பார்க்கிறான் நிஜமற்ற மனிதன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...