Monday, January 16, 2023

மாயவன் by Veena Shankar

 


மதுரத்தை தேடும் மாதுவும்

மாதுவின் மனதை திருடும் மாதவனும் அழகே


கண்ணை மறைத்தாலும் மாதவன் அகிலத்தை மறவாதவன்


சிவந்த கரங்களுக்கு நடுவே நீல வர்ணன்


காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.

என் விழியால் நீ காண் உலகத்தை


காந்தாரி அல்ல நான்., என் கண்ணை மறைக்க.

என் விழியால் நீ காண் உலகத்தை


காதலால் கண் மறையவில்லை

என் காதலியின் கரங்களால் மறைந்தது

அகிலத்தை அறிந்திலேன் என் காதலியின் காதல் முன்


கண்ணை மறைத்த பின்னும் 

காணும் காட்சி அழகு

என் காதலியின் கரங்களுக்கு ஊடே

அதனால் பிறந்த புன்னகையும் 

காதலியின் பொன்னகைக்கு ஈடாகுமோ?


மாயவன் கண்களுக்கு தணிக்கையில்லை

காணிக்கையாக்குகிறேன் என் கரங்களை

என் விழி கொண்டு என்னையே கண்காட்சியாய் காண

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...